For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறப்பு... சீசன் இல்லாத நிலையில் 5,000 பறவைகள் முகாம்!

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறக்கப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இங்கு சீசன் இல்லாவிட்டாலும் 5,000 மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன.

நாட்டிலேயே மிகவும் பழமையான பறவைகள் சரரணாலயம் மதுராந்தகம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கலில் உள்ளது. இங்கு வேடந்தாங்கல் ஏரி ஒன்று உள்ளது.

இந்த ஏரியின் மொத்த பரப்பு 40 ஹெக்டேர் ஆகும். இங்கு மே அல்லது ஜூன் மாதங்களில் சீசன் தொடங்கும் போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வரும்.

 பறவைகள் வேட்டையாடல்

பறவைகள் வேட்டையாடல்

இந்த இடம் கடந்த 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் பறவைகளை வேட்டையாடி பொழுதை கழிப்பதற்காக பயன்படுத்தி வந்தனர். இதனால் இந்த ஊருக்கு வேடர்களின் கிராமம் என்ற பெயரும் உண்டு. அதன் பின்னர் கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க 1797- ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த இலயோனசு பிளெசு என்பவர் வேடந்தாங்கலைப் பறவைகள் சரணாலயம் என்று ஆய்வு செய்து அறிவித்தார்.

 ஏராளமான பறவைகள்

ஏராளமான பறவைகள்

இந்த வேடந்தாங்கல் ஏரி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ளதால் இங்கு எவ்வித இடையூறும் இன்று முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்காக ஏராளமான பறவைகள் வருகின்றன. கனடா, சைபீரியா, வங்கதேசம், பர்மா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வரும்.

 பறவைகளின் வரவு

பறவைகளின் வரவு

வேடந்தாங்கல் ஏரியில் உள்ள மரங்களில் கிளுவை, ஊசிவால் வாத்து, நீலச்சிறகி, வாத்துகள், தட்டவாயன், பச்சைக்காலி, பவளக்காலி, பட்டாணி உள்ளான், உண்ணிக்கொக்கு, சிறுவெண் கொக்கு, சிறிய நீர்க்காகம், கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, பாம்புத்தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டுக்கொக்கு எனப்படும் மடையான், நத்தைகுத்தி நாரை, முக்குளிப்பான், கொண்டை நீர்க்காகம்
வக்கா ஆகிய பறவைகள் வரும். வெளிநாடுகளில் மே அல்லது ஜூன் மாதங்களில் குளிர் காலம் தொடங்குவதால் அங்குள்ள பறவைகள் வேடந்தாங்கலுக்கு வரும்.

 பறவைகளுக்காக...

பறவைகளுக்காக...

இந்த பறவைகளின் எச்சம் வயல்வெளிகளுக்கு இயற்கை உரமாக இருக்கும் என மக்கள் கருதுகின்றன. அதனால் நம் நாட்டுக்கு விருந்தாளியாக வரும் அந்த பறவைகளுக்கு இடையூறு இன்றி பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

 சரணாலயம் திறப்பு

சரணாலயம் திறப்பு

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த வேடந்தாங்கலில் சீசன் இல்லாத நிலையில் 5,000-க்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. இதனால் இன்று முதல் மக்கள் பார்வைக்காக இந்த சரணாலயம் திறக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சரணாலயத்தை பார்வையிடலாம்.

English summary
Vedanthangal birds sanctuary which is situated in Maduranthgam, Kanchipuram Distritct opens today. As 5,000 more birds are in sanctuary though its not the season.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X