For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வறண்ட வேடந்தாங்கல் ஏரி... ஊர் திரும்பும் பறவைகள்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: கோடை வெப்பம் காரணமாக வேடந்தாங்கல் ஏரி வறண்டு காணப்படுகிறது. இது விரைவில் மூடப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். அங்குள்ள வேடந்தாங்கல் ஏரியில் நவம்பரில் தொடங்கி ஜூலை கடைசி வரை சீசன் நிலவது வழக்கம்.

வறண்ட ஏரி

வறண்ட ஏரி

தற்போது பருவமழை பொய்த்துப் போனதால், பாதியளவு மட்டுமே உள்ள ஏரியின் நீர்பரப்பு, விரைவில் வறண்டு விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திரும்பிய பறவைகள்

திரும்பிய பறவைகள்

தண்ணீர் இல்லாத காரணத்தால் வேடந்தாங்கலுக்கு படையெடுத்த வெளிநாட்டு பறவைகள், சீசன் காலம் முடியும் முன்பாகவே சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளன.

திண்டாடும் பறவைகள்

திண்டாடும் பறவைகள்

மேலும் ஏரியும் குட்டை போல் காட்சியளிப்பதால், போதிய இரை கிடைக்காமல் பறவைகள் திண்டாடி வருகின்றன. இதனால் பறவைகள் சரணாலயத்தை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மூடப்படும் அபாயம்

மூடப்படும் அபாயம்

பறவைகளும் இன்றி சுற்றுலா பயணிகளும் இன்றி வேடந்தாங்கல் சராணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது. இன்னும் சில தினங்களில் முற்றிலும் வற்றிவிடும் என்பதால், வேடந்தாங்கல் ஏரி விரைவில் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

English summary
It's time to hang your binoculars as the 200-year-old Vedanthangal and Karakili bird sanctuaries will close in few days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X