For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடிக்க தண்ணி இல்லை.. குழந்தைகளுக்கு காய்ச்சல்.. பார்க்க யாரும் வரலை.. வேதனையில் வேதாரண்யம் மக்கள்

2 நாளாக உணவின்றி தவிப்பதாக வேதாரண்யம் மக்கள் மறியல் செய்தனர்.

Google Oneindia Tamil News

வேதாரண்யம்: "புயல் வந்து போய் 2 நாளாச்சு.. இன்னும் தண்ணி இல்ல... சோறு இல்ல..." என்று வேதாரண்ய மக்கள் கொதித்து போய் பேசி வருகிறார்கள்.

கரையை கடக்கும்போது வேதாரண்யத்தை ஒரு காட்டு காட்டிட்டு போய்விட்டது கஜா புயல். இதனால் தனித்துவிடப்பட்டு விட்டது வேதாரண்யம் பகுதி.

சுழட்டியடித்த காற்றில் கூரைகளும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளும் பறந்தன. குடியிருக்கும் வீடுகள் எல்லாம் நீரில் மூழ்கின. பயிர்கள் எல்லாம் கண் முன்னாலேயே நாசம் ஆயின. இதனால் கிட்டத்தட்ட 10 பேர் பாதிக்கப்பட்டு விட்டார்கள். இவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டனர்.

ஆடு, மாடையெல்லாம் பிள்ளையா நினைக்கறீங்களே.. மனிதர்களிடம் ஜாதி பார்ப்பது ஏன்.. ரஞ்சித் ஆதங்கம் ஆடு, மாடையெல்லாம் பிள்ளையா நினைக்கறீங்களே.. மனிதர்களிடம் ஜாதி பார்ப்பது ஏன்.. ரஞ்சித் ஆதங்கம்

 யாருமே வந்து பாக்கல

யாருமே வந்து பாக்கல

ஆனால் என்ன பிரயோஜனம்? குடிக்கிற தண்ணிக்கே அல்லாட வேண்டியிருக்கிறது என்று சொல்கிறார்கள். குறிப்பாக தேத்தாக்குடி புதுப்பள்ளி, செம்போடை, வேட்டைகாரன்இருப்பு, அகஸ்தியன்பள்ளி, வெள்ளப்பள்ளம் ஆகிய பகுதியை சேர்ந்த மக்கள்தான் ரொம்பவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். "புயல் அடிச்சு 2 நாள் ஆச்சு... அதிகாரிகளோ, அமைச்சர்களோ யாராவது வந்தார்களா? முகாம்களில் அரிசி, கேஸ் மட்டும் இருக்கிறது.

 மறியலில் மக்கள்

மறியலில் மக்கள்

அதை வெச்சிக்கிட்டு எப்படித்தான் சமைச்சு சாப்பிடறது?" என்று கொதித்து போய் கேட்கிறார்கள். இதனால் கோபடைந்த மக்கள், முறிந்துவிழுந்த மரங்களை தூக்கி கொண்டு வந்து நடுரோட்டில் போட்டு நேற்று மறியலும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

 குழந்தைகளுக்கு காய்ச்சல்

குழந்தைகளுக்கு காய்ச்சல்

இதே குற்றச்சாட்டைதான் அதிராம்பட்டிணம் அருகே உள்ள பழஞ்சூர் என்ற கிராம மக்களும் சொன்னார்கள். உடனடியாக சாப்பாட்டுக்கு வழி செய்ய வேண்டும், குழந்தைகளுக்கு ஜூரம் வந்துவிட்டது, எங்க தூக்கிட்டு போறது? மருத்துவ முகாம் ஒன்றினை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று கூறி முழக்கமிட்டார்கள்.

 மருத்துவ வசதி வேண்டும்

மருத்துவ வசதி வேண்டும்

இப்படியே சேர்மன்வாடி, வண்டிபேட்டை, ராஜாமடம், முதல்சேரியிலும் மக்கள் கடுமையான கோபத்துக்கு உள்ளாக்கி மறியலில் ஈடுபட்டார்கள். எனவே பாதிக்கப்பட்ட வேதாரண்யம் உள்ளிட்ட மக்களுக்கு உடனடியாக உணவு, மருத்துவ வசதிகள் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்து வருகிறது.

English summary
Vedharanyam people suffers without food and water due to Gaja
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X