For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலினின் 'கொளத்தூர் மணி' வியூகத்தால் அதிர்ச்சி... சரண்டரான 'சசிகலா' ஆதரவு வீரமணி!

சசிகலாவுக்கு ஆதரவு தந்த வீரமணி நேற்று ஸ்டாலினிடம் சரணடையும் நிலை உருவானது. ஸ்டாலின் வகுத்த வியூகத்தை எதிர்பார்க்காததாலேயே வீரமணி சரணடைந்தார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச்செயலராக சசிகலா தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முதல் குரல் கொடுத்த திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, நேற்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு கேக் ஊட்டி சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச்செயலர் பதவியை கைப்பற்ற வேண்டும் என திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார் சசிகலா. அவருக்கு ஆதரவாக முதல் குரலை வெளிப்படுத்தினார் கி. வீரமணி.

ஸ்டாலின் - கொளத்தூர் மணி சந்திப்பு

ஸ்டாலின் - கொளத்தூர் மணி சந்திப்பு

திமுகவுடன் மிக நெருக்கமாக இருந்து வந்த வீரமணியின் இந்த அறிக்கை அக்கட்சி தலைவர்களையும் தொண்டர்களையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து வீரமணிக்கு எதிரான கொளத்தூர் மணி உள்ளிட்டோரை ஸ்டாலின் கோபாலபுரம் வரவழைத்து பேசினார்.

அதிர்ச்சியில் வீரமணி

அதிர்ச்சியில் வீரமணி

ஸ்டாலினின் இந்த வியூகத்தை சற்றும் எதிர்பார்க்காத வீரமணி தரப்பு அதிர்ச்சியில் உறைந்தது. இதையடுத்து திமுகவுடன் சமாதானமாகும் முயற்சியாக நாங்க ஏன் அப்படி ஒரு நிலை எடுத்தோம் என வழக்கம் போல தத்துவ வியாக்யானம் சொல்ல ஆரம்பித்தது.

செயல் தலைவர் ஸ்டாலின்

செயல் தலைவர் ஸ்டாலின்

ஆனாலும் திமுகவினரால் வீரமணியின் சசிகலா ஆதரவு நிலையை ஜீரணிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

ரொம்பவே குழைந்த வீரமணி

ரொம்பவே குழைந்த வீரமணி

இதையடுத்து தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது ரொம்பவே ஸ்டாலினுடன் குழைந்தபடிதான் வீரமணி பேசினார்.

சரண்டர் வீரமணி

சரண்டர் வீரமணி

ஸ்டாலினுக்கு கேக் ஊட்டி கொஞ்சியதைப் பார்த்த திமுக தொண்டர்கள், தளபதி ஒரு போடு போட்ட உடனே எப்படி சரணடைகிறார் பாருங்க.. என கமெண்ட் அடித்ததையும் கேட்க முடிந்தது.. திக தொண்டர்கள் ரொம்பவே அப்செட் ஆகியிருந்ததையும் பார்க்க முடிந்தது.

English summary
DK leader K Veeramani wishes to MK Stalin who appointed as DMK's Working President yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X