For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீராணம் ஏரி வறண்டது - சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தம் -குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா?

வீராணம் ஏரி வறண்டு விட்டதால் சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீரின் அளவு முழுமையாக நிறுத்தப்பட்டது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    வீராணம் ஏரி வறண்டது - சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா?

    கடலூர்: வீராணம் ஏரி வறண்டதால், சென்னைக்குக் குடிநீர் அனுப்புவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கோடை காலத்திற்கு முன்பே சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இது, 6150 ஏக்கர் பரப்பளவும் 1465 மில்லியன் கனஅடி கொள்ளளவும் கொண்டது. வீராணம் ஏரியால் சுமார் 45,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. கடந்த ஆண்டு கோடை காலத்தில் வறண்ட வீராணம் ஏரி பருவமழையால் நிரம்பியது.

    Veeranam water stops to Chennai

    2017 செப்டம்பரில் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர், கல்லணை வழியாகக் கீழணை வந்து, அங்கிருந்து வடவாற்றில் திறக்கப்பட்டு வீராணம் ஏரிக்கு வரத் தொடங்கியது. இதனால், வீராணம் ஏரியின் நீர் மட்டம் விரைவாக உயர்ந்து அதன் முழுக் கொள்ளளவான 45.7 கன அடியை எட்டியது. இதனையடுத்து அந்த ஏரியிலிருந்து சென்னைக்கு நிறுத்தப்பட்டிருந்த குடிநீர் விநியோகம், 2017 நவம்பர் 8ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது.

    வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தினமும் 72 கனஅடி வீதம் நீர் அனுப்பப்பட்டுவந்தது. ஆனால், கடந்த 4 மாதங்களில் வடகிழக்குப் பருவமழை பெய்யாததால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து தண்ணீர் வரத்து இல்லாமல் போனது. இதனால், ஏரியின் நீர்மட்டம் 39.20 அடியாகக் குறைந்தது. இதனால், கடந்த 3 மாதமாக விவசாயத்திற்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை.

    கடந்த ஜனவரி மாதம் கீழணையிலிருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், வீராணம் ஏரியில் நீர் வரத்து இல்லாமல் வற்றத் தொடங்கியது. கடந்த வார நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 39.15 அடி. இதில் சென்னை மக்களின் குடிநீருக்கு வினாடிக்கு 27 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால், சென்னைக்கு அனுப்பப்படும் நீரின் அளவு 19 கன அடியாகக் குறைக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டுவந்தது. மார்ச் 21ஆம் தேதி காலை வரை விநாடிக்கு 18 கனஅடி நீர் அனுப்பப்பட்டுவந்தது.

    இந்நிலையில், வீராணம் ஏரி வறட்சி நிலைக்குச் சென்றதால் அதிகாரிகள் சென்னைக்கு அனுப்பப்படும் நீரை நிறுத்தப்போவதாகத் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து, மார்ச் 22 முதல் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீரின் அளவு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த ஆண்டு சென்னையின் குடிநீர் தேவையை அதிக அளவில் பூர்த்தி செய்யும் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர்திறப்பது நிறத்தப்பட்டுள்ளதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையின் குடிநீர் தேவையை பூண்டி, சோழவரம், ரெட்ஹில்ஸ், செம்பரம்பாக்கம் ஏரிகள் நிறைவேற்றுகின்றன. இந்த ஆண்டு பருவமழை ஓராளவு பெய்த காரணத்தால் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் மழை நின்று போனது. தற்போது நான்கு ஏரிகளில் முழு கொள்ளளவான 11,257மில்லியன் கன அடியில் 4850 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    கடந்த ஆண்டு இதே நாளில் மொத்தம் 1464 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே நீர் இருந்தது. இதனால் கல்குவாரிகளில் தேங்கியிருந்த தண்ணீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. வருணபகவான் மனது வைத்து கோடை மழை பெய்தால் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து

    English summary
    Supply of water from Veeranam lake here to Chennai to meet the drinking water needs was stopped from Thursday owing to poor storage, a Public Works Department official said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X