For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உண்மை மறைப்பு.. ராஜ்குமார், பார்வதம்மா மீது போலீஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நீதிபதி கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு- 9 பேரும் விடுதலை

    ஈரோடு: மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் அவர் மனைவி பார்வதம்மா மீது உண்மையை மறைக்க முயன்ற குற்றத்திற்காக போலீஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, ராஜ்குமார் கடத்தல் வழக்ககு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    2000மாவது ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெங்களூரில் இருந்து தாளவாடிக்கு மனைவி பார்வதம்மாவுடன் சென்ற கன்னட நடிகர் ராஜ்குமார், சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் மற்றும் அவர் கூட்டாளிகளால் கடத்தப்பட்டதாகவும், நூறு நாட்களுக்கு மேல் வனத்தில் வைத்திருந்து பிறகு விடுதலை செய்ததாகவும் வீரப்பன் உள்ளிட்ட 10 பேர் மீது கோபி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.

    இன்று நீதிபதி மணி தீர்ப்பு வழங்கினார்.

    ஆதாரம் இல்லை

    ஆதாரம் இல்லை

    அப்போது, வீரப்பன் மற்றும் கூட்டாளிகள்தான் ராஜ்குமாரை கடத்தினார்கள் என்பதற்கான உரிய ஆதாரங்களை போலீஸ் தரப்பு தெரிவிக்கவில்லை என்று, தெரிவித்தார். இதனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

    [ராஜ்குமார் கடத்தல் வழக்கு.. 9 பேரும் விடுதலை.. அரசுத் தரப்பு மீது கோர்ட் சரமாரி குற்றச்சாட்டு! ]

    அதிருப்தி

    அதிருப்தி

    குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கான முக்கியமான காரணம், காவல்துறை இந்த விஷயத்தில் உரிய ஆதாரங்களை சமர்பிக்கவில்லை என்பதுதான். காவல்துறை ஏனோதானோவென விசாரித்துள்ளது என்று நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. முதல் தகவல் அறிக்கை மறைக்கப்பட்டுள்ளது.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    வீரப்பன் தவிர பிறரின் அங்க அடையாளங்களை சம்பவங்களை நேரில் பார்த்த யாரும் தெரிவிக்கவில்லை. அவர்களின் வாக்குமூலங்கள் சரியாக பெறப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. வழக்கில் கடத்தப்பட்ட ராஜ்குமாரை விசாரிக்கவும், அடையாளம் கேட்கவும் காவல்துறை முயலவில்லை. ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மாளையும் விசாரிக்கவில்லை. எனவே குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று தீீர்ப்பு வழங்கப்பட்டது.

    [ராஜ்குமார் கடத்தல் வழக்கு.. குற்றம் சாட்டப்பட்டோர் யார்.. விடுதலையானது யார்.. இதோ பட்டியல்! ]

    ராஜ்குமார், பார்வதம்மா

    ராஜ்குமார், பார்வதம்மா

    ராஜ்குமாரும், பார்வதம்மாளும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஏன் சாட்சியம் அளிக்க முன்வரவில்லை. அவர்கள் உண்மையை மறைக்க முற்பட்டால் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக போலீஸ் ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். ராஜ்குமாரும், பார்வதம்மாளும் இப்போது மறைந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Why police didn't took any action against Rajkumar and Parvathamma for trying to hide kidnap facts, asks court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X