For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யானை தந்தம் கடத்தல் வழக்கு: 18 ஆண்டுகள் கழித்து வீரப்பனுக்கு விடுதலை!

யானை தந்தம் கடத்திய வழக்கில் இருந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு வீரப்பனுக்கு விடுதலை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    யானை தந்தம் கடத்தல் வழக்கு, வீரப்பனுக்கு விடுதலை!

    சத்தியமங்கலம் : யானை தந்தம் கடத்தியதாக சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சந்தனக் கடத்தல் வீரப்பன் உட்பட 6 பேரை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொண்டப்பநாயக்கன் பாளையம் வனப்பகுதியில் பில்பாளி என்கிற இடத்தில், துப்பாக்கிகள் மூலம் காட்டுயானைகளைக் கொன்று, தந்தங்களை கடத்தியதாக கடந்த 2000ம் ஆண்டில் 5 பேரை அதிரடிப்படையினர் பிடித்தனர்.

    veerappan and his associate acquitted in tusk smuggling case

    இவர்கள் 5 பேரும் சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ், ஆறுமுகம், சண்முகம், ஜவஹர்,ராஜேந்திரன் உட்பட இந்தக் கடத்தலில் தொடர்புடைய பிரபல சந்தனக்கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளி சந்திரகவுடா ஆகிய 7 பேர் மீது வனத்துறை வழக்குப் பதிவு செய்தது.

    இந்த வழக்கு சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய வீரப்பன், சந்திரகவுடா, கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் இறந்துவிட்ட நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது .

    அந்த தீர்ப்பில், வனத்துறையினர் தகுந்த ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்கத் தவறியதால் ஆறுமுகம் தவிர மற்ற 6 பேரையும் விடுதலை செய்வதாகக் கூறி நீதிபதி குமாரசிவம் தீர்ப்பளித்தார்.

    English summary
    veerappan and his associate acquitted in tusk smuggling case. Sathyamangalam court acquitted close associate of sandalwood smuggler Veerappan, in connection with an ivory smuggling case, in 2000.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X