For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. வழக்கு தீர்ப்புகள்..சுப்ரீம் கோர்ட்டில் விடை கிடைக்கும் வரை மவுனம் காப்போம்: கி. வீரமணி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா நீதிமன்றங்கள் முரண்பட்ட தீர்ப்புகள் வழங்கியுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில்தான் இதற்கு விடை கிடைக்கும்...அதுவரை மவுனமாக இருப்பதே நல்லது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களின் உயர்நீதிமன்ற மேல் முறையீட்டினை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி, ஜெயலலிதா அவர்களையும், அவருடன் இணைந்து தண்டிக்கப்பட்ட மூவரையும் தண்டனையிலிருந்து விடுதலை செய்தும், அபராதத் தொகை ரூ.100 கோடியை ரத்து செய்தும், சொத்துக் களுக்கான தடையை ரத்து செய்தும் அதிர டித் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Veermani on Jaya case Verdict

அரசு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா பேட்டி

"இத்தீர்ப்பு ஒரு விசித்திரத் தீர்ப்பு! எனது 58 ஆண்டு கால வழக்குரைஞர் தொழில் வரலாற்றில் இப்படி ஒரு தீர்ப்பினை இதுவரை கேட்டதே இல்லை!

அப்பீல்தாரர்களின் வழக்குரைஞர் களுக்கு பல நாள் வாதம் செய்ய வாய்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி, அரசு வழக்குரைஞரான எனக்கு ஒரு நாள் அவகாசம்தான் தந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதுதான் இறுதித் தீர்ப்பாக அமையும்" என்று கருநாடக அரசு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா குறிப்பிட்டுள்ளார்.

செல்வி ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகி விட்டால், தமிழகத்தில் நிலவிய செயலற்ற நிலை மாறி, ஆட்சியின் செயல்களுக்கு அவரும் அவரது ஆட்சியும் நேரடிப் பொறுப்பேற்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது இந்தத் தீர்ப்பு என்பது உடனடிப் பயன்.

கர்நாடக நீதித்துறை தந்துள்ள இந்த இரண்டு முரண்பட்ட தீர்ப்புகளுக்கு விடை உச்சநீதிமன்றத்தில்தான் காணமுடியும். அதுவரை இப்பொழுது தரப்பட்ட இத்தீர்ப்பு, நியாயப்படி சரியா, தவறா என்று விவாதிப்பதைவிட, மவுனம் காப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.

துவக்கத்திலிருந்தே இவ்வழக்கின் வரலாற்றில் விசித்திரங்களுக்குப் பஞ்சமே இல்லை என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்; காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

English summary
DK leader K Veeramani said that we should wait for the final verdict in Jaya case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X