For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேய் மழை.. குறைந்த வரத்து - சென்னையில் காய்கறியும், மீனும் கொள்ளை விலைக்கு விற்பனை!

Google Oneindia Tamil News

சென்னை: மழையால் காய்கறிகள் வரத்து பெருமளவில் குறைந்துள்ளது. குறிப்பாக நாளொன்றுக்கு 60 முதல் 70 லாரிகளில் வந்து கொண்டிருந்த தக்காளி தற்போது 30 முதல் 35 லாரிகளில் தான் வருகிறது. இதன் காரணமாக அதன் விலை உயர்ந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று கீரை கட்டுகள், புதினா, கொத்தமல்லி வரத்து இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

veggies and fish rate high in Chennai

இதுகுறித்து கீரை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் கூறும்போது, ‘‘10 லாரிகளில் வந்து கொண்டிருந்த கீரை கட்டுகள், மழையால் ஒரு லாரி மட்டுமே வந்தது. இன்று அந்த ஒரு லாரியும் வரவில்லை. இதனால் கீரை வியாபாரிகள் ஏமாற்றத்துடனேயே திரும்பினார்கள். சிறிய வாகனங்களில் வந்த ஒரு சில கீரைக்கட்டுகளின் விலையும் அதிகமாகவே இருந்தது'' என்றார்.

மேலும், மீன் மார்க்கெட்டுகளில் மீன் வரத்து இல்லாததால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. மழையால் மீனவர்கள் சில நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன் வரத்து குறைந்து, அதன் விலை அதிகரித்துள்ளது. மீன்களின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.100 வரை உயர்ந்துள்ளது.

கோயம்பேடு காய்கறி விலை நிலவரம்:

உருளைக்கிழங்கு (கிலோவுக்கு) - ரூ. 20 முதல் ரூ.22,
பல்லாரி - ரூ.50,
பீன்ஸ் - ரூ.50,
கேரட் - ரூ.40,
நூக்கல் - ரூ.30,
சவ்சவ் - ரூ.30,
பீட்ரூட் - ரூ.25,
முட்டைக்கோஸ் - ரூ.15 முதல் ரூ.20,
மிளகாய் - ரூ.20 முதல் ரூ.30,
இஞ்சி - ரூ.50 முதல் ரூ.80,
சேப்பங்கிழங்கு - ரூ.30,
சேனைக்கிழங்கு - ரூ.30,
வெண்டைக்காய் - ரூ.40,
அவரைக்காய் - ரூ.50,
கோவைக்காய் - ரூ.20,
பாகற்காய் - ரூ.30,
முருங்கைக்காய் - ரூ.80,
தக்காளி - ரூ.70 முதல் ரூ.80 வரை,
சாம்பார் வெங்காயம் - ரூ.50 முதல் ரூ.60 வரை,
காலிபிளவர் - ரூ.30,
புடலங்காய் - ரூ.25,
பீர்க்கங்காய் - ரூ.20,
கத்தரிக்காய் - ரூ.50,
வாழைக்காய் (காய் ஒன்று) - ரூ.3,
தேங்காய் (காய் ஒன்று) - ரூ.18.

சில்லறை விற்பனை கடைகள்:

பீன்ஸ் - ரூ.80 முதல் ரூ.100 வரை,
கேரட் - ரூ.60 முதல் ரூ.80 வரை,
மிளகாய் - ரூ.50,
கத்தரிக்காய் - ரூ.80 முதல் ரூ.100 வரை,
பீட்ரூட்- ரூ.40,
அவரைக்காய் - ரூ.80 முதல் ரூ.100 வரை,
முருங்கைகாய் - ரூ.80 முதல் ரூ.100 வரை,
வெண்டைக்காய் - ரூ.40 முதல் ரூ.50 வரை,
பெல்லாரி - ரூ.50,
சாம்பார் வெங்காயம் - ரூ.80,
பாகற்காய் - ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது.

சென்னையில் மீன் விலை:

இதுதான் இப்படி என்றால் மீன் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் மீன் விலை நிலவரம்:

veggies and fish rate high in Chennai

வஞ்சிரம் - ரூ.500
கருப்பு வவ்வால் - ரூ.420
கிழங்கா - ரூ.280
நெத்திலி - ரூ.160
அயிலா - ரூ.120
மத்தி - ரூ.80
பாறை - ரூ.250
சீலா - ரூ.260
கடம்பா - ரூ.160
காரல் - ரூ.60
நண்டு - ரூ.140
கடல் இறால் - ரூ.350

English summary
Veggies and fish rate hiked in oftentimes due to heavy rain in Chennai, flow rate decreased.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X