For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார் ஓட்டுநர் தற்கொலை முயற்சி எதிரொலி.. வேளச்சேரி காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை

வேளச்சேரி காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: வேளச்சேரி காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் கார் ஓட்டுநர் தீக்குளிப்பு சம்பவத்தில் இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளதால் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரில் கார் ஓட்டுநராக இருக்கிறார் மணிகண்டன். இவர் காரில் சீட் பெல்ட் போடவில்லை என்று வேளச்சேரி காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தாக்கி இருக்கிறார்.

Velachery SI transferred to waiting list after car driver attempts suicide

சாலையில் பலர் பார்க்கும்படி இவர் தாக்கப்பட்டு இருக்கிறார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் தீக்குளித்தார்.

தற்போது மணிகண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவர் உடலில் 59 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த தீக்குளிப்பு சம்பவத்தில் குற்றச்சாட்டப்பட்ட உதவி ஆய்வாளர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி விஜயகுமார் உதவி ஆய்வாளர் பதவியில் இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.

English summary
Velachery SI Vijayakumar transferred to waiting list after car driver Manikandan attempts suicide. Vijayakumar thrashed Manikandan for not wearing seat belt earlier the day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X