For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனல் பேச்சுக்கள்.. அதிரடி ரெய்டுகள்.. துப்பாக்கி சூடு.. பலாத்கார புகார்.. பரபரவென முடிந்த பிரச்சாரம்

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து முதல் ஆண்டிப்பட்டி துப்பாக்கி சூடு வரை நேற்று பரபரப்பாகி விட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடியில் இருக்கும் கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை

    சென்னை: பரபரப்பு.. பதட்டம்.. சர்ச்சைகள்.. குழப்பம் என்று ஒரே நாளில் ஏகப்பட்ட விஷயங்கள் பிரச்சார தினத்தின் கடைசி நாளான நேற்று நடந்து முடிந்தன!

    தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு வரை கூட்டணி, சீட் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருந்தது. இதில் ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும், அக்கட்சி தலைவர்களுக்கும் மனஸ்தாபம் வேறு நடந்தது.

    கூட்டணியில் இருக்கிறார்களே தவிர முழு மனசுடன் நிறைய பேர் இல்லை என்பதே உண்மை! அதற்கு உதாரணம், வைகோ, திருமாவளவன், ஜவாஹிருல்லா, விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், வாசன்.. என சொல்லலாம். ஏன்.. இந்த லிஸ்ட்டில் பாஜகவை கூட சேர்க்கலாம்!

    வேலூரில் தேர்தல் ரத்து முடிவை திரும்ப பெற வேண்டும்- தேர்தல் ஆணையத்துக்கு கதிர் ஆனந்த் கடிதம் வேலூரில் தேர்தல் ரத்து முடிவை திரும்ப பெற வேண்டும்- தேர்தல் ஆணையத்துக்கு கதிர் ஆனந்த் கடிதம்

    சொதப்பல்கள்

    சொதப்பல்கள்

    இதன்பிறகு பிரச்சாரத்திற்கு சென்ற நாள் முதல் வேறு மாதிரியான பஞ்சாயத்துக்கள் எழ ஆரம்பித்தன. முதலாவது எல்லா முன்னணி தலைவர்களின் பேச்சுகளின் சொதப்பல்கள், கதிர்காமு பெண் விவகாரம், ஊருக்குள் ஓட்டு கேட்டு சென்ற சில மூத்த வேட்பாளர்களையே விரட்டி அடிப்பது, பதிலுக்கு வேட்பாளர்கள் மக்களிடம் கோவத்தை காட்டுவது என தொடர்ந்தது.

    கதிர் ஆனந்த்

    கதிர் ஆனந்த்

    இதனிடையேதான் 2 பெரிய பிரச்சனைகள் தலையெடுத்தது. ஒன்று வேலூர் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் ரெயிடு, மற்றொன்று அமமுக பெரியகுளம் வேட்பாளர் கதிர்காமுவின் பெண் விவகாரம். இதில் கதிர்காமுவை பொறுத்தவரை கிரெட் எஸ்கேப்தான். கொஞ்சம் விட்டிருந்தால் பெரியகுளம் தேர்தலும் நின்று போயிருக்கும். நீதிமன்றம் தலையிட்டதால் தலை தப்பியது.

    உங்களுக்கு அரசியல் தெரியுமா? அப்போ பதில் சொல்லுங்க.. பாஸ் பண்ணிட்டா கெத்துதான்!

    வேலூர் தொகுதி

    வேலூர் தொகுதி

    ஆனால் கதிர்ஆனந்த் விஷயத்தை மட்டும் எளிதாக விடமுடியவில்லை. பெரிய தொகுதி, பெரிய புள்ளி, பெரிய இடம்.. தேர்தல் பிரச்சாரத்தை 6 மணிக்கு முடித்து கொண்டு முழுசாக யாரும் அவங்கவங்க வீட்டுக்கு போய்கூட சேர்ந்திருக்க மாட்டார்கள். அதற்குள் தேர்தல் ரத்து என ஒரு அறிவிப்பு தமிழக மக்களுக்கே ஷாக் தந்தது.

    பரபரப்பு

    பரபரப்பு

    இதையடுத்து திடீரென கனிமொழி வீட்டுக்குள் 10 பேர் ரவுண்டு கட்டி சோதனை நடத்தவும் திமுகவின் அடிமட்ட தொண்டர்களின் வயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டியது. கடைசியில் கனிமொழி வீட்டில் எதுவுமே கிடைக்கவில்லை என்று சொன்னாலும் 2 மணி நேரம் பரபரப்பு தொண்டர்களை வெறுப்பின் உச்சிக்கு கொண்டு சென்றது.

    பணப்பட்டுவாடா

    பணப்பட்டுவாடா

    தொடர்ந்து தமிழக மக்களின் பதட்டம் தேனி பக்கமும் தொத்திக் கொண்டது. தங்கதமிழ்செல்வன் மீது கடுப்பா, அல்லது ஓபிஎஸ் மகனின் வெற்றி பற்றின எண்ணமா தெரியவில்லை.. திடீரென அங்கு துப்பாக்கிசூடு. அமமுக பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாகவும், அப்போது அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், போலீசாரை அமமுகவினர் தாக்க முற்பட்டபோது, பாதுகாப்பு கருதி வானத்தை நோக்கி சுட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடைசியில், இதில் தேவையில்லாமல் கவனம் திசை திருப்பப்பட்டதும், பதற்றமடைந்ததும் தேனி தொகுதி மக்கள்தான்!

    நாஞ்சில் சம்பத்

    நாஞ்சில் சம்பத்

    இதற்கு நடுவே கரூரில் ஜோதிமணி விவகாரம் தலைதூக்கியது. அவருக்கு ஆரம்பம் முதலே தேர்தல் கமிஷன், மாவட்ட நிர்வாகம், போலீஸ் குடைச்சல் தந்து வந்தது. அதன்பிறகுதான் செந்தில்பாலாஜி இதில் தலையிட்டார். நிலைமையை ஓரளவு சமாளித்து ஜோதிமணி கூடவே நின்றார். இருந்தாலும், குண்டர்களை களமிறக்கி ஜோதிமணிக்கு எதிரான அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதில் நாஞ்சில் சம்பத்தின் வேனும் அடித்து நொறுக்கப்பட்டது.

    டென்ஷன்

    டென்ஷன்

    ஆக மொத்தம், இதுவரை பிரச்சாரம் என்பது அமைதியாக நடந்து முடிந்தது என்பதுதான் பெரும்பாலான தமிழக அரசியல் நமக்கு முன் வைத்துள்ள வரலாறு. ஆனால் நேற்று ஒரே நாளில் கல்வீச்சு, தேர்தல் ரத்து, துப்பாக்கி சூடு... போன்றவையெல்லாம் நடந்துள்ளதை பார்த்தால்,அடுத்து வாக்குப் பதிவுக்கு இன்னும் டென்ஷன் கூடுதலாக இருக்குமோ என்ற அச்சமும் வராமல் இல்லை

    English summary
    Raid in Kanimozhis house, Thanmbidurai dominates in Karur and Vellore Election cancelled by Election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X