For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீக்குளிப்புகளை கைவிடுக- எந்த நிலையிலும் எதிர்த்துப் போராட வேண்டும்: தமிழக வாழ்வுரிமை கட்சி

தவாக நிர்வாகி ஜெகன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதற்கு அக்கட்சி தலைமை நிலையம் இரங்கல் தெரிவித்துள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    வேல்முருகன் கைது..தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி தீக்குளித்து தற்கொலை- வீடியோ

    கடலூர்: நம்மைத் தாக்கும் எந்த நிலையிலும் நாம் எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர, தீக்குளிப்பு போன்ற முடிவை எடுக்க வேண்டாம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

    தவாக தலைவர் வேல்முருகன் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தீக்குளித்த கட்சி நிர்வாகி ஜெகன் 80% தீக்காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    Velmurugan regrets for party cadre Suicide

    ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமை நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர், குண்டடிபட்டோரை விசாரிக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை அங்கு செல்லவிடாமல் தூத்துக்குடி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி சிறைவைத்து, மறுநாள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்டதான பொய்வழக்கில் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    Velmurugan regrets for party cadre Suicide

    திட்டமிட்டுத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பழிவாங்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஈடாகத் துன்புறுத்தப்படுவதையும் தாங்கிக்கொள்ள முடியாத மன உளைச்சலில்தான் கடலூர் மாவட்டம், பெரியாண்டிக்குழி நிர்வாகி ஜெகன் தீக்குளித்திருக்கிறார். 80 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

    அவரது இழப்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு அதிர்ச்சியையும் அளவுகடந்த துயரத்தையும் அளிக்கிறது. அவருக்கும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், சுற்றத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! நம்மைத் தாக்கும் எந்த நிலையானாலும் அதனை எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர, இப்படிப்பட்ட முடிவை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தோழர்கள் யாரும் எடுக்கக் கூடாது என்று கையெடுத்துக் கும்பிட்டு அவர்களைக் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Velmurugan regrets for party cadre Suicide. Tamizhaga Vazhurimai Katchi party cadre Jagan torched himself for his leader Velumurugan arrested on National Defence Act .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X