For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தரகாண்ட்டிலும் தலைமறைவாக இருந்த மதன்... திருப்பூர் பெண்ணும் உடனிருந்தாரா? போலீஸ் விசாரணை

சென்னை: உத்தரகாண்ட்டில் சில மாதங்கள் வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ரூ80 கோடி வசூலித்து மோசடி செய்துவிட்டு எஸ்கேப்பானார் வேந்தர் மூவிஸ் மதன். தாம் அனைத்து பணத்தையும் எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்துவிடம் கொடுத்துவிட்டதாகவும் ஒரு கடிதம் எழுதிவைத்து தலைமறைவானர் மதன்.

கடந்த மே மாதம் முதல் மதன் கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட இடங்களில் தலைமறைவாக இருந்துள்ளார். அவருடன் திருப்பூரில் பிடிபட்ட இளம்பெண்ணும் இருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Vendhar movies Madhan purchases assests in Uttarakhand

அத்துடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் மதன் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தென்னிந்தியாவில் தேடப்படும் நபர்கள் உத்தரகாண்ட், இமாச்சலில் பதுங்கிக் கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவும் வழக்கு ஒன்றில் இமாச்சல பிரதேசத்தில் பதுங்கியிருந்தபோதே பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Police sources said that Vendhar Movies Madhan who was cheating students has purchased assets in Uttarakhand State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X