For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

க்யூ வரிசையில் நிற்கும் மெரினா பீச் வண்டிக் கடைகள் – மாநகாராட்சிக்கு திருப்தி; வியாபரிகள் அதிருப்தி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் சிறு வியாபாரிகள், தங்களின் கடைகளை மாநகராட்சி நிர்வாகம் வரிசையாக இருக்குமாறு இடம் மாற்றியதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

மெரினாவில் உள்ள 1,500 கடைகளை முறைப்படுத்தும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி கடந்த வாரம் ஈடுபட்டது.

கடற்கரை உட்புறச் சாலையை ஒட்டியவாறே அண்ணாசதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை நீண்ட வரிசையில் பல கடைகள் இருந்தன.

Vendors restricted to five zones on the Marina, ban on new shops

அழகான வரிசையில் கடைகள்:

அந்த கடைகளை அங்கிருந்து அகற்றி, அவற்றை மணற்பரப்பில் கடலை நோக்கிய 5 வரிசைகளில் மாநகராட்சி இடம் மாற்றியுள்ளது.

இடையூறு இப்போ இல்லை:

சாலையை ஒட்டியவாறு கடைகள் இருந்தால், அவை பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், பார்ப்பதற்கு அழகாக இல்லையென்றும் மாநகராட்சி கூறி வந்தது.

Vendors restricted to five zones on the Marina, ban on new shops

முடங்கும் வியாபாரம்:

கடைகளை மாற்றியமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நீண்ட காலமாகவே முயற்சி எடுத்து வந்தனர். ஆனால், அப்படி செய்தால் வியாபாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் எதிர்த்து வந்தனர்.

குற்றம் சொல்லும் வியாபாரிகள்:

பல முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட பின்னர் கடைகள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இட மாற்றத்தால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக அங்குள்ள வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கன்னாபின்னா கடைகள்:

ஆனால், மாநகராட்சி அதிகாரிகளோ, "கடைகள் எல்லா இடங்களிலும் இருந்தால், எத்தனை கடைகள் உள்ளன என்று எங்களுக்கு தெரிவதில்லை. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கடை போட்டுக்கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.

குப்பை அள்ளவும் ஈசி:

எனவே, கடைகளை வரிசைப்படுத்தியுள்ளோம். வாகனங்களை நிறுத்துவதற்கு இப்போது கடைகள் இடையூறாக இருக்காது. குப்பைகளை அள்ளுவதும் எளிதாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளனர்.

English summary
Chennai Corporation on Saturday shifted all shops on the Marina beach to five zones, restricting around 2,500 vendors to five rows along the stretch from Triumph of Labour Statue to Light House.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X