For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் இருந்து உறுப்பு மாற்று சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார்கள்.. வெங்கையா நாயுடு புகழாரம்

மருத்துவத்துறையில்தமிழகம் சிறந்து விளங்குவதாக குடியரசுதுணைத் தலைவர் வெங்கையா நாயுடுதெரிவித்துள்ளார்.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா சிறந்த மருத்துவமனை கட்டமைப்புகளை உருவாக்கியதால் மருத்துவத்துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடுஅரசு உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை ஆணையமும், குளோபல் மருத்துவமனையும் இணைந்து ஆயிரமாவது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியதற்கான கருத்தரங்கு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

 Venkaiah Naidu praises that TN Medical department is good pioneer

இதில் பங்கேற்று பேசிய வெங்கையா நாயுடு, உடலுறுப்பு தானத்தில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாகத் திகழ்வது பெருமையளிப்பதாகக் கூறினார். துரித உணவுகள், மருத்துவர் பரிந்துரைக்காத நேரத்தில் தாமே எடுத்துக் கொள்ளும் மருந்துகள், மது, ஆகியவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமாக வாழ்விற்கு முறையான உணவு, உடற்பயிற்சி, யோகாசனங்களை மக்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வெங்கய்யா கேட்டுக் கொண்டார்.

லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பலர் தமிழகம் வருவதாகவும் வெங்கையாநாயுடு குறிப்பிட்டார்.

English summary
Vice president Venkaiah Naidu praises that TN Medical Department is good pioneer. In a Seminar about Medical growth in TN, Vice president said that TN has good Foundation for Medical reforms
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X