For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓபிஎஸ் அணியில் நடிகை லதா- நேரில் சந்தித்து ஆதரவு!!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து நடிகை லதா ஆதரவு தெரிவித்துள்ளார்.

By Vazhmuni
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து நடிகை லதா தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் ஓபிஎஸ் அணியில் இணைய வேண்டும் எனவும் லதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. சசிகலா, ஓபிஎஸ் அணிகள் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.

இவர்களுக்கு மத்தியில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். அவருக்கு ஒரு சில அதிமுக நிர்வாகிகள் மட்டுமே தற்போது ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தாவல் படலம்

தாவல் படலம்

அதிமுகவைச் சேர்ந்த 12 எம்பிக்கள், 11 எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் திடீரென ஓபிஎஸ் அணியிலிருந்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் சசிகலா அணிக்கு தாவி வருகின்றனர்.

யார் யார்?

யார் யார்?

ஓ.பி.எஸ் அணிக்கு அதரவு தெரிவித்து வந்த நெல்லை மாவட்டம், செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் செல்லப்பா, கடையநல்லூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் ஹனீஸ் ஆகியோர் நேற்று முன்தினம் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதனைத்தொடர்ந்து, ஓபிஎஸ் அணியில் இருந்த வந்த வீணை காயத்ரியும், சசிகலா அணிக்கு தாவினார்.

லதா ஆதரவு

லதா ஆதரவு

இதனிடையே தீபாவின் எம்.ஜி.ஆர் - அம்மா தீபா பேரவை செயலாளர்கள் நியமிப்பது உள்ளிட்ட பல விவகாரங்களில் நாளுக்கு நாள் பிரச்சனை பூதாகரமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை திடீரென அவரது இல்லத்தில் சந்தித்து நடிகை லதா ஆதரவு தெரிவித்தார்.

விசுவாசிகளுக்கு அழைப்பு

விசுவாசிகளுக்கு அழைப்பு

அப்போது பேசிய நடிகை லதா, ஜெயலலிதா வழியில் ஆட்சியை ஓ.பன்னீர்செல்வத்தால் மட்டும் தான் நடத்த முடியும். அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் ஓபிஎஸ் அணிக்கு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

English summary
Veteran actress Latha met former CM O Panneerselvam his home today and extends her support to him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X