For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநர் அதிகாரத்துக்குட்பட்டே துணை வேந்தர் நியமனம்.. அரசுக்கு சம்பந்தமில்லை.. அமைச்சர் விளக்கம்

ஆளுநர் அதிகாரத்துக்குட்பட்டே துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

    சென்னை: ஆளுநர் அதிகாரத்துக்குட்பட்டே துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் சூரப்பா நியமனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அரசுக்கு சம்பந்தமில்லை

    அரசுக்கு சம்பந்தமில்லை

    அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஆளுநர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே துணை வேந்தரை நியமித்துள்ளார், இதில் அரசுக்கு சம்பந்தமில்லை என்றும் அரசு அதில் தலையிட முடியாது என்றும் கூறினார்.

    காவிக்கு இடமில்லை

    காவிக்கு இடமில்லை

    நாட்டிலேயே அறிவுசார் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்றும் தமிழகத்தில் உள்ள கல்வியாளர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.தமிழகத்தில் கருப்பு,சிவப்பு, வெள்ளை நிறம்தான் ஆட்சி செய்யும் என்றும் காவிக்கு இங்கு இடமில்லை என்றும் ஜெயக்குமார் கூறினார்.

    பிசிசிஐ முடிவு

    பிசிசிஐ முடிவு

    தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், தமிழகத்தின் உணர்வை புரிந்து எதிர்ப்பால் ஐபிஎல் நடத்தலாமா வேண்டாமா என்பதை பிசிசிஐ தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    அர்த்தம் தெரியாமல்

    அர்த்தம் தெரியாமல்

    காவிரி விவகாரத்தில் மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறோம் என்ற ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என 100% நம்பிக்கை உள்ளது என்றார். ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் மத்திய அரசு நீதிமன்றம் சென்றுள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

    English summary
    Minister Jayakumar said that the Vice-Chancellor has been appointed under the governance authority and there is nothing to do with the government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X