For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாஃப்ட்வேர் கம்பெனில உள்ள தற்போதைய நிலவரம் இதுதான்...!! கலக்கல் வீடியோ!

இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட கம்பெனிகளில் அதிரடி ஆட்குறைப்பு அரங்கேறி வருவதை கலாய்த்து கலக்கல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: விப்ரோ, காக்னிசண்ட் நிறுவனங்களை தொடர்ந்து டெக் மகிந்திரா மற்றும் இன்போசிஸ் ஆகியவை ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளன. இந்தியாவில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் நிறுவனங்களில் இன்போசிஸ் மூன்றாவது இடத்திலும், டெக் மகிந்திரா ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

மென்பொருள் நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஊழியர்களின் செயலாக்கத் திறனை மதிப்பீடு செய்து அதில் மிகவும் பின் தங்கி இருப்பவர்களை பணியில் இருந்து நீக்குவது வழக்கம். அந்த வகையில் டெக் மகிந்திரா நிறுவனம் இம்மாதத்துடன் ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

Videos on social medias about the termination of workers in IT

இதே நடவடிக்கையின் பேரில் இன்போசிஸ் நிறுவனமும் பல மூத்த அதிகாரிகள் உள்பட நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஐடி நிறுவனங்களின் இந்த பணி நீக்க நடவடிக்கையை கலாய்த்து சமூக வலைதளங்களில் கலக்கல் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

ஐடி நிறுவனங்களில் வழங்கப்படும் ஓஎஸ் அவார்டுக்கு அவுட் ஸ்டாண்டிங் பர்ஃபாமன்ஸ் என்பது அர்த்தமல்ல ஒழுங்கா செய் என்பது தான் என்றும் வாங்கும் வரை வேலையை வாங்கிவிட்டு நமக்கே ரிவீட் அடித்து வெளியே அனுப்புவதும்தான் என கலாய்த்துள்ளனர். ஊழியரிடம் பணிநீக்கம் குறித்து கூறிக்கொண்டிருக்கும் போதே ஹெச் ஆர் டெர்மினேட் செய்யப்படுவதுமாக வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

English summary
Videos has been released on social medias about the termination of workers in software companies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X