For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தின் தற்காலிக ஆளுநராக வித்யாசாகர் ராவ் இன்று பதவியேற்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவி காலம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை. மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து அவர் இன்று மாலை பொறுப்பேற்கவுள்ளார்.

தமிழக ஆளுநராக கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டவர் ரோசய்யா. மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதும் காங்கிரஸ் ஆளுநர்கள் அனைவரும் மாற்றப்பட்ட நிலையில் ரோசய்யா உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே பதவியில் தொடர்ந்து வந்தனர்.

 VidhyaSagar rao to take oath tomorrow

ரோசய்யாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. வழக்கமாக ஆளுநர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியான ஓரிரு நாட்களுக்கு பின் அவர்கள் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு சென்று பதவியேற்பர். ஆனால் தமிழகத்துக்கு புதிய ஆளுநர் யாரும் அறிவிக்கப்படாததால் ரோசய்யாவுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கும் என கூறப்பட்டு வந்தது.

ஆனால் ரோசய்யாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்காமல் மத்திய அரசு அவரை நேற்று விடுவித்தது. மேலும் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், தமிழக ஆளுநராக வித்யாசாகர் ராவ் இன்று பொறுப்பேற்க உள்ளார். மாலை 4.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

English summary
TN Governor ( Incharge ) VidhyaSagar rao to take oath tomorrow, 4:30pm at Raj Bhavan Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X