டெங்குவைக் கட்டுப்படுத்தாத அரசைக் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்!- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தாத அரசைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகல் கட்சி சார்பில் மாவட்ட தலைநகர்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு டெங்குக் காய்ச்சல் பரவி அதற்கு தினம் சராசரியாக 10 பேர் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் டெங்குக் காய்ச்சல் பரவலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாது பொதுமக்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Viduthalai siruththaikal katchi staged protest against TN government

அதிலும் டெங்கு காய்ச்சல் பாதித்தவர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் குறித்து தவறான தகவலை அரசு கூறிவருகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. இந்நிலையில், டெங்குவைக் கட்டுப்படுத்தாத அரசைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகல் கட்சி சார்பில் மாவட்ட தலைநகர்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விசிக மாவடட் செயலாளர் கனியமுதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஏராளமானோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Viduthalai siruththaikal katchi staged protest against TN government as it failed to Control Dengue fever.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற