For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சார் கொஞ்சம் சும்மா இருங்களேன்.. எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டிகளை பார்த்து மிரளும் விஜய் ரசிகர்கள்

சந்திரசேகரை பேட்டியெடுக்காதீர்கள் என்று டிவி சேனல்களுக்கு பல ஆயிரம் ரசிகர்கள் பின்னூட்டம் அனுப்ப ஆரம்பித்தனர். இருப்பினும் சந்திரசேகர் சளைக்கவில்லை

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டிகளை பார்த்து மிரளும் விஜய் ரசிகர்கள்-வீடியோ

    சென்னை: 'மெர்சல்' பிரச்சினைகள் சற்று ஓய்ந்த நிலையில், நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த அடுத்தடுத்த பேட்டிகளை விஜய் ரசிகர்களே ரசிக்கவில்லை என்பது அவர்களின் சோஷியல் மீடியா பதிவுகளில் அப்பட்டமாக எதிரொலிக்கிறது.

    மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்குமாறு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்த கருத்தால் தமிழகத்து சினிமா ரசிகர்களும், கருத்துரிமை ஆதரவாளர்களும் மொத்தமாக மெர்சலுக்கு ஆதரவு கரம் நீட்டினர்.

    சமூக வலைத்தளங்களில் பரம வைரிகளை போல மோதிக்கொண்டிருந்த அஜீத்-விஜய் ரசிகர்கள் பெரும்பாலும், இந்த விஷயத்தில் இணைந்து செயல்பட்டு ஆச்சரியம் ஏற்படுத்தியிருந்தனர்.

    மெர்சலுக்கு ஆதரவு

    மெர்சலுக்கு ஆதரவு

    தமிழகத்திலுள்ள திரை பிரமுகர்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்களும் விஜய்க்கு ஆதரவாகவும், பாஜக தலைவர்களுக்கு எதிராகவும் பேட்டிகள் அளித்தனர். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூட டிவிட்டரில் மெர்சல் படத்திற்கு ஆதரவாகவும், மோடிக்கு எதிராகவும் கருத்து கூறும் அளவுக்கு அகில இந்திய பிரச்சினையாக உருவெடுத்தது மெர்சல் பட விவகாரம்.

    மதம், மொழி கடந்து நேசம்

    மதம், மொழி கடந்து நேசம்

    பாஜகவின் எச்.ராஜா, விஜய் கிறிஸ்தவர் என்பதால், பாஜக அரசுக்கு எதிராக உள் நோக்கம் கற்பித்து வசனம் பேசியதாக கூறியபோதும்கூட, பொருட்படுத்தாத ரசிகர்கள், ஜாதி, மொழி, மதம் கடந்து தங்கள் ஆதரவை மெர்சல் படத்திற்கு வெளிப்படுத்த தொடங்கியிருந்தனர். அந்த நேரத்தில்தான், விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டிகள் சர்ச்சைகளுக்கு காரணமாகின.

    அரசியல் சர்ச்சை

    அரசியல் சர்ச்சை

    புதிய தலைமுறை சேனலுக்கு விஜய் அளித்த பேட்டியில், விஜய், தலைவராக உருவாகி நம்பியுள்ளவர்களுக்கு மாற்றத்தை தர வேண்டும் என்று கூறினார் எஸ்.ஏ.சந்திரசேகர். இவருக்கு விஜய் அரசியலில் ஈடுபட ஆசை உண்டு என்ற பேச்சு இருப்பதால், மெர்சல் படத்திற்கு கிடைத்த ஆதரவை அரசியலுக்காக பயன்படுத்த நினைக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்தது.

    சளைக்கவில்லை

    சளைக்கவில்லை

    விஜய் ரசிகர்கள் கூட, சந்திரசேகர் பேட்டியால் தங்கள் அபிமான நாயகனுக்கு கிடைத்த தடை கடந்த நேசம் தடுக்கப்பட்டுவிடுமோ என்று அச்சப்பட ஆரம்பித்தனர். சந்திரசேகரை பேட்டியெடுக்காதீர்கள் என்று டிவி சேனல்களுக்கு பல ஆயிரம் ரசிகர்கள் பின்னூட்டம் அனுப்ப ஆரம்பித்தனர். இருப்பினும் சந்திரசேகர் சளைக்கவில்லை.

    சும்மா சொன்னார் விஜய்

    சும்மா சொன்னார் விஜய்

    தந்தி டிவிக்கு அளித்த பேட்டியின்போது, விஜய் தப்பான புள்ளி விவரம் சொல்லியுள்ளார் என்று தமிழிசை, எச்.ராஜா கூறினால் அதற்கு ஏன் எதிர்வினையாற்றுகிறீர்கள் என பேட்டியெடுத்தவர் கேட்டதற்கு, விஜய் படத்தில் சும்மா பேசுவதற்கும், அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பவர் பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது என பதிலளித்தார் சந்திரசேகர். விஜய் உண்மையான அக்கறையோடு பேசியதாக ரசிகர்கள் எண்ணும் நேரத்தில் அவரின் தந்தை இப்படி பேட்டி கொடுத்தது ரசிகர்களை ஆதங்கப்பட வைத்துள்ளது. ரசிகர்களின் சமூக வலைத்தள பதிவுகளில், இதை பார்க்க முடிகிறது.

    அஜீத், விஜய்

    அஜித்துக்கு ஒரு சிறுத்தை சிவா, விஜய் க்கு ஒரு SA சந்திரசேகர் என்று கூறுகிறது இந்த டிவிட்.

    ரொம்ப படுத்துறாரே

    "இந்த சந்திரசேகர் வேற நம்மள ரொம்ப டார்ச்சர் பண்றாரு டா" என்கிறது இந்த விஜய் ரசிகரின் பதிவு

    English summary
    Actor Vijay fans wants his father S.A.Chandrasekar to be silent as his interviews to the TV channels creating discussions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X