For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மல்லையா தைரியமாக சரணடையலாம்... புழல் சிறையில் "ஸ்டே" பண்ணலாம்!.. நெட்டிசன்கள் அதகளம் #புழல்சிறை

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய சிறைகள் சுத்தமாக இருக்கக் கூடாது என கூறி கொள்ளும் விஜய் மல்லையா தாராளமாக சரணடையலாம், புழல் சிறையில் ஸ்டே செய்யலாம் என நெட்டிசன்கள் கலகலப்பாக தெரிவித்துள்ளனர்.

இந்திய வங்கிகளில் ரூ9000 கோடி கடனை பெற்று விட்டு லண்டன் தப்பிய விஜய் மல்லையாவை நாடு கடத்த இந்திய அரசு லண்டன் . நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அவரோ இந்திய சிறையில் வசதிகள் குறைவாக இருக்கும் என்பதால் தன்னை அதில் அடைக்கக் கூடாது என்று வாதிட்டு வருகிறார்.

சமீபத்தில் சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக புகைப்படங்கள் வெளியாகின. இதனால் விஜய் மல்லையா தைரியமாக சரணடைந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டால் அவர் எதிர்பார்ப்பதற்கும் மேல் சொகுசு வசதிகள் இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

செம கவனிப்பு

இதனால் தான் ஜெயிலுக்கு போறதை #மாமியார் வீட்டுக்கு போறோம் என்று சந்தோசமா சொல்வதா?

செம்ம கவனிப்பு போல!!
#புழல்சிறை

முறைகேடு

சசிகலா சிறையில் சொகுசு வசதிகள் வாழ்கிறார் என வாய்கிழிய பேசிய அரசியல் கட்சி தலைவர்கள் #புழல் சிறையின் முறைகேட்டை பற்றி பேச மறுப்பது ஏன்.?

பயமா.?

எதிலும் முன்னோடி தமிழன்

ஆக , விஜய் மல்லையாவுக்கு சிறந்த சிறைச்சாலை #புழல்.
எதிலும் முன்னோடி தமிழன் டா

லண்டன் கோர்ட்டில் காட்டவில்லை

புழல் சிறை வீடியோவை ஏன் யாரும் லண்டன் கோர்ட்டில் காட்டவில்லை?

புழல் சிறை

சொகுசு வாழ்க்கை வாழ விரும்பும் விஜய் மல்லையாவை இந்திய சிறைக்கு கொண்டு வரலாம். மும்பை ஆர்தர் ரோடு சிறையின் வீடியோவை காட்டிலும் புழல் சிறையின் வீடியோவை பிரிட்டன் அரசிடம் சமர்ப்பித்திருக்க வேண்டும்.

சுற்றுலா மேம்பாட்டுக்காகவோ!

ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள்; உல்லாச விடுதியாக மாறிய புழல் சிறை!

என்னடா நடக்குது, ஒரு வேலை மல்லையாவை புழழ்க்கு கொண்டு வர tourism promotion செய்யராங்களோ?

English summary
Netisans shared their comments on Puzhal prison that Vijay Mallya may surrender and can afford in Puzhal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X