For Daily Alerts
Just In
விஜயதசமி, ஆயுத பூஜை: தமிழக மக்களுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து
சென்னை: விஜயதசமி, ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

செயலாற்றல் மற்றும் பணியிடங்களை பூஜிக்கும் ஆயுத பூஜை விழாவும், தீமைக்கு எதிராக நன்மை வெற்றிபெறும் என்ற கோட்பாட்டின்படி, குழந்தைகள் மத்தியில் ஞானம் என்னும் ஒளியை தரக்கூடிய கல்வியை பயிற்றுவிக்க ஊக்கமளிக்கும் திருவிழாவாக விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகின்றன.
இந்த மங்களகரமான இருவிழாக்களும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளில் வாழும் மக்களிடையே திறன்மேம்பாடு, அறிவுவளர்ச்சி மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை வளர்த்து இந்தியாவை உலகின் தலைமை பீடத்தில் அமர்த்த வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.