For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அட்சயாவிற்கு பொங்கல் ஊட்டி விஜயகாந்த் கொண்டாடிய மாட்டுப்பொங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது வீட்டில் வளர்க்கும் பசுக்களுக்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்தினார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது வீட்டில் பொங்கல் வைத்து மாட்டுப்பொங்கல் கொண்டாடினார்

இதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜயகாந்த், எங்கள் வீட்டு லட்சுமி, அட்சயா , அர்த்தநாரி, மீனாட்சிக்கு சர்க்கரை பொங்கல் ஊட்டி மாட்டுப்பொங்கல் கொண்டாடினோம் என்று கூறியுள்ளார்.

லட்சுமி, அட்சயா

லட்சுமி, அட்சயா

மதுரையில் பிறந்த விஜயகாந்துக்கு மாடுகள் மீது கொள்ள பிரியம். அதனாலேயே வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். அவரது வீட்டில் வளர்ந்து வந்த பசுமாட்டுக்கு லட்சுமி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தார். லட்சுமி பசு சமீபத்தில் கன்று ஒன்றை ஈன்றது. அந்த கன்றுக்கு அட்சயா என்ற பெயரை விஜயகாந்த் வைத்துள்ளார்.

மாட்டுப்பொங்கல்

மாட்டுப்பொங்கல்

அந்த கன்றுக்குட்டியை அவ்வப்போது விஜயகாந்த் கொஞ்சுவது வழக்கம். பெரிய நடிகராகவும், அரசியல் தலைவராகவும் இருக்கும் விஜயகாந்த், மாடுகள் மீது அன்போடு இருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்த சூழ்நிலையில் இன்று தனது வீட்டில் மாட்டுப்பொங்கலை உற்சாகமாக கொண்டாடினார்.

விஜயகாந்த் கொண்டாட்டம்

விஜயகாந்த் கொண்டாட்டம்

எங்கள் வீட்டு லட்சுமி, அட்சயா , அர்த்தநாரி, மீனாட்சிக்கு சர்க்கரை பொங்கல் ஊட்டி மாட்டுப்பொங்கல் கொண்டாடினோம் என்று பதிவிட்டுள்ளார் விஜயகாந்த்.

விஜயகாந்த், பிரேமலதா

விஜயகாந்த், பிரேமலதா

பிரேமலதாவும் விஜயகாந்தும் இணைந்து மாடுகளை தொட்டு கும்பிட்டு வணங்கியும், மாடுகளுக்கு பொங்கல் ஊட்டி விட்டும் வணங்கினர். விஜயகாந்தின் மகன் மாடுகளை பிடித்து இருக்க பொங்கல் ஊட்டும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

English summary
DMDK leader Vijayakanth has celebrated Mattu Pongal with his cattle Arthanari, Meenakshi, Lakshmi and Akshya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X