For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக பட்ஜெட் - ஒரு கண்துடைப்பு நாடகம் : விஜயகாந்த் அட்டாக்

தமிழக பட்ஜெட் ஒரு கண்துடைப்பு நாடகம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையானது ஒரு கண்துடைப்பு நாடகம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்தார்.

2018-19-ஆம் நிதிஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓபிஎஸ் தாக்கல் செய்தார். இன்றைய தினம் சுகாதாரம், பயிர்க்கடன், ஊரக வளர்ச்சி, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட துறைகளுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Vijayakant comment on TN Budget

இதுகுறித்து முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் தமிழக பட்ஜெட் 2018 - 19 : சென்ற நிதி ஆண்டில் அறிவித்த பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில், தற்போது பல திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கி தமிழக அரசு அறிவித்து இருப்பது, ஒரு கண்துடைப்பு நாடகமாகவும், தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகவுமே இந்த பட்ஜெட் அறிவிப்பு உள்ளது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

English summary
DMDK General Secretary Vijayakant says that TN budget and the fund they releases are totally eye washing the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X