For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறந்த இந்திய குடிமகனுக்கான விருதை பெற்றவர் விஜயகாந்த்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சிறந்த இந்திய குடிமகனுக்கான விருதை பெற்றவர் விஜயகாந்த் என்பதை மறக்க முடியுமா?

அவருக்கு இன்று 66-ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அவர் குறித்த விஷயங்களை நாம் நினைவு கூர்ந்து வருகிறோம்.

Vijayakant gets best citizen award in 2001

நடிகர்களில் இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு பொது மக்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும்,மருத்துவமனைகள், ஏழை மாணவர்கள் படிப்புச் செலவு என்று பல வழிகளில் பெரும் பொருள் உதவி செய்து வருபவர் விஜயகாந்த்.

தமிழர்களுக்கு மட்டும் அல்லாமல் குஜராத் பூகம்பம், ஒரிஸா புயல் என்று தேசிய அளவிலும் அவர் செய்துவரும் உதவிகள் ஏராளம். அவரது சேவை மனப்பான்மைக்கும், உதவும் குணத்திற்கும் மத்திய அரசின் அங்கீகாரம் கடந்த 2001-ஆம் ஆண்டு கிடைத்தது.

இந்தியாவின் மனிதநேயத்துக்கான சிறந்த இந்திய குடிமகன் விருது கேப்டனுக்கு வழங்கப்பட்டது. நடிகர் விஜயகாந்துக்கு "டெல்லி தமிழ் இளைஞர் பண்பாட்டுக் கழகம்" சார்பில் பாராட்டு விழா நடந்தது.

அப்போது அந்த விழாவில் பேசிய விஜயகாந்த், "தமிழ் தவிர வேறு மொழி எனக்குத் தெரியாது. இந்நிலையில் டெல்லியில் எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற அச்சம் இருந்தது. இங்கு நீங்கள் எல்லாம் தமிழ் உணர்வோடு ஒரு தமிழனை வரவேற்று உபசரித்ததைக் கண்டு மனம் நெகிழ்ந்து போனேன்" என்றார்.

English summary
Vijayakant gets best citizen award in 2001 in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X