For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயகாந்த் 65... சினிமா கலைஞர் டூ புரட்சி கலைஞர்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: விஜயகாந்த் தனது 65வது பிறந்தநாளை பசுமைத் தமிழகமாக 2.5 லட்சம் மரங்களை நட்டு கொண்டாடி வருகிறார். மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வாழ்த்த... பீனிக்ஸ் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டியுள்ளார் பிறந்தநாள்.

தனது பிறந்தநாளை கடந்த பல ஆண்டுகளாகவே வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடிய விஜயகாந்த், தற்போது பசுமைத் தமிழகமாக மாற்றி கொண்டாடி வருகிறார்.

Vijayakanth 65 biography book

விஜயகாந்த மனது ராசிப்படி 5 மரம் நட்டுள்ளார். அதுவும் பச்சை கலர் டப்பாவில் தண்ணீர் ஊற்ற மரம் நடப்பட்டது.

பிறந்தநாள் கொண்டாடும் விஜயகாந்த் பற்றி அவரது வாழ்க்கை வரலாறு புத்தகம் எழுதிய யுவகிருஷ்ணா என்ன கூறியுள்ளார் படியுங்களேன்.

விஜயராஜ் மதுரையில் அழகர்சாமி - ஆண்டாள் தம்பதியின் மூன்றாம் குழந்தையாக பிறந்தவர். இளம் வயதில் நாடார் கடையில் மிட்டாய் வாங்கி சாப்பிட்டு தீப்பெட்டி சீட்டு, கோலி, கில்லி ஆடுவது இவரின் வாடிக்கையாம்.

மதுரை வீதிகளில் கையை விட்டு ஸ்டைலாக சைக்கிள் ஓட்டுவது பிடித்தமானது... ஆனாலும் அண்ணன் ஒரு பூந்தோட்ட காவல்காரன். பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ரைஸ்மில்லை பார்க்க போய்ட்டார். அங்கே இளம் பருவத்திற்கே உரிய தென்றல் வீசியுள்ளது. குடும்ப சூழ்நிலையால் அது நிறைவேறவில்லை.

மதுரையில் சேனாஸ் சினிமா கம்பெனி வைத்திருந்த மர்சூக் & எம்.ஏ.காஜா ஆகிய 2 பேரும் தான் கேப்டனின் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளம் போட்டவர்கள். பின்பு எஸ்.ஏ சந்திரசேகர் இவர் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர். அதனால் தான் இன்னமும் தான் அர்ச்சனை செய்யும் போது சந்திரசேகர் பெயருக்கும் சேர்த்தே அர்ச்சனை செய்து வருகிறார்.

இன்னொருவர் இவரது நண்பர் அ.செ. இப்ராஹீம் ராவுத்தர், பால்ய பருவத்திலிருந்தே நண்பர்களாக உள்ளனர். அதனால் தான் வேறு மொழிப்படங்களை ஒத்துக்கொள்ளாதவர் இவருக்காக 'மே டே' என்ற ஆங்கிலப்படத்திற்கு பூஜை போட்டார். அதுவும் வெளிவரவில்லையாம்.

1984ம் வருடம் பதினெட்டு படங்களில் நடித்து உச்சத்தில் இருந்தார். தமிழ் சினிமாவின் முதல் 3டி படமான அன்னைபூமியில் நடித்துள்ளார் விஜயகாந்த். அந்த ஆண்டே கலைஞர் கையால் ஷீல்டு வாங்கினார். கலைப்புலி தாணுவால் புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டார்.

விஜயகாந்துக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர். ஆனால் அவரால் எம்.ஜி.ஆர் உடன் சேர்ந்து ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொள்ள முடியவில்லை. அது அவருக்கு வருத்தமான விசயம்தான். அந்த குறையை போக்கவே, தன் பிறந்த நாளுக்கு ஆண்டுதோறும் 50ஆயிரம் ரூபாய் ராமாவரம் காது கேளாதோர் பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்து வர்றார்.

அந்த மதிப்பின் காரணமா தான் எம்.ஜி.ஆர். பயன்படுதிய பிரச்சார வேனை அன்பளிப்பா கொடுத்தார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையார்.

வாரம் 300 பேருக்கு ஞாயிற்றுகிழமை அன்று அன்னிக்கு அன்னதானம், வருஷா வருஷம் இலவசமா ஏழைகளுக்கு திருமணம், நிவாரண நிதிகள் கொடுத்து சிவந்து கரங்களுக்குச் சொந்தக்காரர் விஜயகாந்த்.

1989ல் மீனாட்சி திருவிளையாடல் படத்தில் சுந்தரேஸ்வரராக நடித்த விஜயகாந்த் பிரேமலதாவை கரம் பிடித்தார். 1990ல் அப்போதய முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி தலைமையில் மதுரையில் பிரம்மாண்டமாக விஜயகாந்த் திருமணம் நடைபெற்றது.

விஜயகாந்த் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது பற்று கொண்டவர் அதனால தான் ஈழத்தமிழர்கள் இன்னல் தீரும்வரை தான் பிறந்த நாளே கொண்டாட போவதில்லை என்று கூறியவர். மேலும் 60 பேர் தாயகம் திரும்ப பல உதவிகளை செய்தவர்.

பலர் எதிர்த்த போதும் தன்னுடைய 100வது படத்துக்கு கேப்டன் பிரபாகரன் என்று பெயரிட்டார். தன்னுடைய மகனுக்கும் கூட அப்பெயரே வைத்தார். அன்று முதல் இன்றுவரை கேப்டன் என்றே அழைக்கப்படுகிறார் விஜயகாந்த்.

இப்புத்தகத்தில் விஜயகாந்த்தின் அரசியல் வாழ்க்கையை முழுமையாக எழுதவில்லை. ஆனாலும் படிக்க சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளனர். இந்த புத்தகம் நிச்சயமாக விஜயகாந்த் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

English summary
Captain Vijayakath's biography book Puratchi kalaignar author Yuvakrishna.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X