For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சகாயத்தை வேலை செய்ய விடாமல் அரசு தடுக்கிறது... விஜயகாந்த் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

தர்மபுரி: கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து வரும் சட்ட ஆணையர் சகாயத்தை பணி செய்யவிடாமல் தமிழக அரசு தடுப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

தர்மபுரியில் நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த். அப்போது அவர் பேசியதாவது:-

Vijayakanth condemns Tamilnadu government

அதிமுக அரசுக்கு மக்களைப் பற்றிய அக்களை துளியும் இல்லை. கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்கும் அதிகாரி சகாயத்தை பணி செய்யவிடாமல் தமிழக அரசு தடுக்கிறது.

தேமுதிகவை எப்படியாவது முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என் மீது இந்த அரசு பல்வேறு வழக்குகளை போடுகிறது. அத்தனை வழக்குகளையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் அனைத்து மாவட்டங்களிலும் எங்களது மக்கள் பணி தொடரும். அனைத்து திட்டங்களுக்கும் அம்மா என பெயர் சூட்டுவதைப்போல டாஸ்டாக் கடைகளுக்கும் அந்த பெயரை சூட்ட வேண்டியதுதானே' என அவர் உரையாற்றினார்.

English summary
The DMDK president vijayakanth has condemned Tamilnadu government for interfering in IAS officer sagayam's investigation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X