For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை-ராமேஸ்வரம் சாலைக்கு ஏபிஜே அப்துல்கலாம் பெயர் சூட்ட விஜயகாந்த் கோரிக்கை

மதுரை-ராமேஸ்வரம் சாலைக்கு ஏபிஜே அப்துல்கலாம் தேசிய நெடுஞ்சாலை என்று பெயர் சூட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரை மதுரை-ராமேஸ்வரம் சாலைக்கு சூட்ட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரியுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் மேகாலயா மாநிலம் சென்ற போது மரணம் அடைந்தார். அவருக்கு நாளை 2ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளது.

Vijayakanth

ரூ.50 கோடி செலவில் மணிமண்டபமும், அறிவு சார் மையமும் ராமேஸ்வரம் பேக்கரும்பில் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில், அவருடைய நினைவு மண்டபத்தை நாளை பிரதமர் மோடி திறக்க உள்ளார்.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதுரை-ராமேஸ்வரம் சாலைக்கு ஏபிஜே அப்துல்கலாம் தேசிய நெடுஞ்சாலை என்று பெயர் சூட்ட வேண்டும் கோரியுள்ளார். மேலும், அந்தச் சாலைக்கு அப்துல் கலாமின் பெயரைச் சூட்டுவதன் மூலம் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் என்றும் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
DMDK leader Vijayakanth has demanded for renaming Madurai-Rameshwaram road as APJ Abdul Kalam national highways.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X