For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் இருந்து திரும்பிய கையோடு கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்!

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், மனைவியுடன் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்!

    சென்னை: அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், மனைவியுடன் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

    திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை

    அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெறுவதற்காக மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா சென்றிருந்தார். இதனால் கருணாநிதியின் இறுதிச்சடங்கில் அவரால் பங்கேற்க முடியவில்லை.

    அதிகாலை திரும்பினார்

    அதிகாலை திரும்பினார்

    அமெரிக்காவில் இருந்தபடியே கண்ணீர் விட்டு கதறியபடி கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர் விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும். இந்நிலையில் இன்று அதிகாலை அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்.

    கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி

    கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி

    அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷூடன் நேராக கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்றார். பின்னர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி அவர் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார்.

    விஜயகாந்த் திருமணம்

    விஜயகாந்துக்கும் அவரது மனைவி பிரேமலதாவுக்கும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிதான் திருமணம் நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    DMDK leader Vijayakanth returns to Chennai from America. Vijayakanth paid tribute to Karunanidhi in his memorial.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X