For Daily Alerts
Just In
அண்ணாவுக்கு விஜயகாந்த் மரியாதை... பண்ருட்டியார் மிஸ்ஸிங்
சென்னை: தேமுதிக சார்பில் அதன் தலைமைக் கழக அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் 105வது பிறந்த நாளையொட்டி கட்சித் தலைவர் விஜயகாந்த் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்து கொள்ளவில்லை.

நிகழ்ச்சியில் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோ, தலைமை நிலைய செயலாளர் ப. பார்த்தசாரதி, எம்.எல்.ஏ., இளைஞர் அணி செயலாளர் எல்.கே. சுதீஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் வரவில்லை. சமீப காலமாக அவர் தேமுதிகவின் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. அந்த வகையில் இன்றும் அவர் வரவில்லை. வராததற்கு காரணம் தெரியவில்லை.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!