For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தப்பு யார் செய்தாலும் அடிப்பேன்.. பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் ஆவேச பேச்சு

By Veera Kumar
Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரத்தில் தேமுதிக, மக்கள் நல கூட்டணி, தமாகா ஆகிய கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:

நாங்கள் 6 கட்சி தலைவர்களும் ஏழை, எளிய மக்களுக்காக எந்நேரமும் உழைக்கக்கூடியவர்கள். எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் உங்களுக்காக ஓடோடி வந்து உழைக்கக்கூடியவர்கள். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் நமது கூட்டணி வேட்பாளர்கள் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

Vijayakanth says he will beaten up whoever doing wrong

தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கிற போர்தான் இந்த தேர்தல். சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். எத்தனை முறைதான் அவர்களை திட்டுவது.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை அதிகமாக நடந்து வருகிறது. இதன் மூலம் பயன் அடைபவர்கள் அந்த இரண்டு கட்சியினர்தான்.

பெரியார், காமராஜர், அண்ணா வழியில் வந்தவர் கருணாநிதி என்று ராகுல் காந்தி கூறுகிறார். கருணாநிதி எழுதி கொடுத்து ராகுல்காந்தியை பேச சொல்லியிருக்கிறார்.

எங்கள் தேர்தல் அறிக்கையை பார்த்து ஜெயலலிதா காப்பி அடித்துள்ளார் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அப்படியானால், 2 பேரும் எப்படியெல்லாம், எதில் எதிலெல்லாம் ஒரே மாதிரியான கட்சிகள் என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

50 ஆண்டு காலம் தமிழகத்தில் மாறி, மாறி திமுக-அதிமுக ஆட்சி செய்து ஊழல் புரிந்துள்ளன. எங்கள் 6 பேர் மீது எந்த குற்றச்சாட்டாவது இருக்கிறதா? நாங்கள் யாரும் ஜெயிலை பார்த்தது கிடையாது. ஆனால் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

தப்பு எங்கு நடந்தாலும் என் கண்ணுக்கு தெரியும். யாராக இருந்தாலும் அடிப்பேன். அடித்தவர்கள் யாராவது என் மீது புகார் செய்தார்களா?

32 மாவட்டங்களிலும் என் மீது வழக்கு போட்டு சுற்ற விட்டார்கள். எல்லா வழக்கையும் உடைத்து விட்டு வெளியே வந்துள்ளேன். விவசாயத்தை என் இரு கண்களாக நினைக்கிறேன்.

முதலில் நான் விருத்தாசலத்தை தேர்ந்தெடுத்தேன். அடுத்து ரிஷிவந்தியம், இப்போது உளுந்தூர்பேட்டையில் நிற்கிறேன். நான் கிராமப்புறங்கள் அனைத்தையும் மாதிரி கிராமமாக மாற்றிக்காட்டுவேன். இந்த விஜயகாந்த் மக்களுக்காகத்தான் வாழ்வான், மக்களுக்காகத்தான் வாழ்ந்தான் என்று இருக்க வேண்டும்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

English summary
Vijayakanth says he will beaten up whoever doing wrong.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X