For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி நாளை திட்டமிட்டபடி போராட்டம்... விஜயகாந்த்

பேருந்த கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று விஜயகாந்த் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று விஜயகாந்த் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் அரசு பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. இதற்கு தமிழக மக்களும், எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் கட்டண உயர்வை திரும்ப பெற மாட்டோம் என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

Vijayakanth says that tomorrow DMDK will held protest

இந்த நிலையில் பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்தது. அதன்படி அனைத்து நிலைகளிலும் ரூ,1 குறைக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட போது ரூபாய் கணக்கில் அதாவது 66 சதவீதம் அளவுக்கு உயர்த்திய நிலையில் பைசா அளவில் குறைத்ததற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டபடி நாளை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதுபோல் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நாளை தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கட்டண குறைப்பு குறித்து விஜயகாந்த் கூறுகையில் பேருந்து கட்டணத்தை குறைத்துவிட்டதுபோல் அரசு நாடகம் ஆடுவதை கண்டிக்கிறேன்.
போக்குவரத்துத் துறையில் நிர்வாகச் சீர்கேட்டை சரி செய்தாலே நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும். பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி நாளை திட்டமிட்டபடி போராட்டம் என்றார் விஜயகாந்த்.

English summary
DMDK General Secretary Vijayakanth says that tomorrow DMDK will conduct protest against bus fare hike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X