For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தலுக்குத் தேர்தல் தொகுதி மாறும் விஜயகாந்த்!

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலுக்குத் தேர்தல் தொகுதியை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

இதுவரை 2 சட்டசபைத் தேர்தலைச் சந்தித்துள்ளார் விஜயகாந்த் தற்போது 3வது சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கவுள்ளார்.

இதுவரை அவர் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றுள்ளார். ஒன்றில் தனியாக வென்றார். இன்னொன்றில் அதிமுக கூட்டணி பலத்துடன் வென்றார். தற்போது 3வது முறையாக 3வது தொகுதியில் போட்டியிடுகிறார்.

2006ல் விருத்தாச்சலம்

2006ல் விருத்தாச்சலம்

2006 சட்டசபைத் தேர்தல்தான் விஜயகாந்த்துக்கும், அவரது கட்சிக்கும் முதல் தேர்தலாகும். இத்தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றார். அவரது கட்சி சார்பில் அவர் மட்டும்தான் வெற்றி பெற்றார்.

2011ல் ரிஷிவந்தியம்

2011ல் ரிஷிவந்தியம்

2011 சட்டசபைத் தேர்தலில் அவர் விருத்தாச்சலம் தொகுதியில் மீண்டும் போட்டியிடவில்லை. மாறாக ரிஷிவந்தியம் தொகுதிக்கு மாறினார். இந்த முறை அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அதில் விஜயகாந்த் உள்பட 29 தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

2016ல் உளுந்தூர்ப்பேட்டை

2016ல் உளுந்தூர்ப்பேட்டை

தற்போது 3வது முறையாக தொகுதி மாறியுள்ளார் விஜயகாந்த். இந்த முறை உளுந்தூர்ப்பேட்டை தொகுதிக்கு அவர் வந்துள்ளார்.

அடுத்து எங்கு நிற்பாரோ?

அடுத்து எங்கு நிற்பாரோ?

இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதியை மாற்றிப் போட்டியிட்டு வருகிறார் விஜயகாந்த். அதை விட முக்கியம் அவர் தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை என்பதுதான்.

அவ்வளவு பயமா "கேப்டன்"?

English summary
DMDK leader Vijayakanth is keep changing his constituency for every assembly poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X