For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரும் அக்டோபர் 29ம் தேதி விக்கிரவாண்டி, நாங்குநேரி எம்எல்ஏக்கள் பதவியேற்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்குநேரியை கைப்பற்றியது அதிமுக..காங்கிரஸ் தோல்வி | aiadmk candidate reddiarpatti won in nanguneri

    சேலம்: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் வரும் 29ம் தேதி பதவி ஏற்கிறார்கள். இதனிடையே வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வத்தை சேலத்தில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    திமுக வசம் இருந்த விக்கிரவாண்டி மற்றும் காங்கிரஸ் வசம் இருந்து நாங்குநேரி ஆகிய தொகுதிகளை அதிமுக கைப்பற்றி உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தியைவிட சுமார் 44 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    Vikravandi and Nankuneri MLAs to be sworn in on October 29

    இதேபோல் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரை விட சுமார் 32 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    இந்நிலையில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகிய இருவரும், வரும் 29ம் தேதி, சபாநாயகர் தனபால் முன்னிலையில் சட்டசபையில் எம்எல்ஏக்களாக பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் இருவரும் பதவியேற்கிறார்கள்.

    புகாரா கொடுக்கிறீங்க... என்ன செய்றோம்னு பாருங்க... அலுவலர்கள் அட்டகாசம்புகாரா கொடுக்கிறீங்க... என்ன செய்றோம்னு பாருங்க... அலுவலர்கள் அட்டகாசம்

    இந்நிலையில் நேற்று வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வாங்கிய முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகிய இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வத்தை சேலத்தில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    English summary
    Vikravandi and Nankuneri MLAs Muthamil selvan,v Narayanan to be sworn in on October 29
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X