For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விக்கிரவாண்டியில் அதிமுக பணப்பட்டுவாடா செய்கிறது.. திமுக தேர்தல் ஆணையத்தில் அதிரடி புகார்!

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

    சென்னை: விக்கிரவாண்டியில் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் பணப்பட்டுவாடா செய்வதாக திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

    நாடு முழுக்க 18 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் நடந்து வருகிறது. அதேபோல் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலும் நடந்து வருகிறது. தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது.

    விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரிக்கு இடைத்தேர்தல் நடந்து வருகிறது. இதற்காக மக்கள் காலையில் இருந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.

    அதிமுக-பாஜக இடையே தொடரும் லடாய்... நாளுக்கு நாள் அதிகரிக்கும் முட்டல், மோதல்அதிமுக-பாஜக இடையே தொடரும் லடாய்... நாளுக்கு நாள் அதிகரிக்கும் முட்டல், மோதல்

    ஏன் தேர்தல்

    ஏன் தேர்தல்

    விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த கே. ராதாமணி இருந்தார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கே. ராதாமணி சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் மரணம் அடைந்ததை அடுத்து விக்கிரவாண்டியில் தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று தேர்தல் நடக்கிறது.

    யார் எல்லாம்

    யார் எல்லாம்

    விக்கிரவாண்டி தொகுதியில், திமுக வேட்பாளராக நா.புகழேந்தியும், அதிமுக வேட்பாளராக, முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்கள். இங்கு எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று திமுக தீவிரமாக பிரச்சாரம் செய்தது. அதேபோல் அதிமுக தலைவர்களும் தங்களது கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து இங்கு பிரச்சாரம் செய்தனர்.

    கட்சி

    கட்சி

    இந்த நிலையில் விக்கிரவாண்டியில் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் பணப்பட்டுவாடா செய்வதாக திமுக புகார் அளித்துள்ளது.தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் திமுக புகார் அளித்துள்ளது. திமுக வழக்கறிஞர் பிரிவினர் சத்யபிரத சாஹுவை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.

    எப்படி புகார்

    எப்படி புகார்

    விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிகளவில் வெளியூர்வாசிகள் தங்கியுள்ளதாகவும், அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று, அதிமுகவிற்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களை வலியுறுத்துவதாகவும், இதற்காக பணம் கொடுப்பதாகவும் திமுக தனது புகாரில் தெரிவித்துள்ளது.

    English summary
    Vikravandi by-election 2019: DMK complaints against AIADMK candidate to Election Commission.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X