For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அதிமுக எம்.பிக்களை விரட்டிய மக்கள்!

Google Oneindia Tamil News

நெல்லை: வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த வந்த அதிமுக எம்பிக்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வல்லராமபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார். ராணுவ வீரராக பணியற்றியவர். இவர் கடந்த 17ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பனிச்சரிவில சிக்கி பலியானார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Villagers fume against ADMK MPs and MLA

இந்த நிலையில் விஜயகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிமுக எம்பிக்கள் முத்துகருப்பன், விஜிலா சத்தியானந்த், சங்கரன்கோவில் அதிமுக எம்எல்ஏ முத்துசெல்வி ஆகியோர் சங்கரன்கோவில் வல்லராமபுரம் வந்தனர். அவரது வீட்டில் விஜயகுமாரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறும்போது 3 யாரும் சின்ன இரங்கல் கூட தெரிவிக்கவில்லையாம்.

இதனால் கோபமடைந்த ஊர் மக்கள், சேனல் வரும் போது (ஜெயா டிவி) மட்டும் நல்ல தெளிவா போஸ் கொடுங்க கூறி எம்பிக்களையும், எம்எல்ஏவையும் பார்த்துக் கோபமாக கூறியுள்ளனர். மேலும் ஊர் மக்கள் கோபமாகவும் பேசத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏ அங்கிருந்து உடனடியாக இடத்தை காலி செய்து விட்டு உடல் அடக்கம் செய்யப்படும் இடத்துக்குப் போய் விட்டனர். அங்கு உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினராம்.

English summary
Villagers near Sankarankovil expressed their angry on ADMK MPs and MLA during their visit to the Vallaramapuram village.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X