For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடியை அதிர வைத்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணி-முற்றுகை: 18 கிராம மக்கள் பங்கேற்பு

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 18 கிராம மக்கள் பேரணி நடத்தினர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடியை அதிர வைத்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணி-வீடியோ

    தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 18 கிராம மக்கள் கண்டன பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்று மாவட்டத்தையே அதிர வைத்துள்ளனர்.

    தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுசூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி கிராம மக்கள் கடந்த 2 மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    Villagers rally to protest against the Sterlite plant

    இதன் அடுத்தகட்டமாக இன்று, 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணியினை துவக்கியுள்ளனர்.

    மடத்தூரிலிருந்து துவங்கிய இப்பேரணி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோக்கி சென்றனர்.

    Villagers rally to protest against the Sterlite plant

    பேரணியாக சென்ற கிராம மக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராம மக்களின் இந்த பேரணியால் தூத்துக்குடியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    18 villagers have been on a protest rally demanding permanent closure of the Thoothukudi Sterlite plant. A lot of men and women have participated in it. Starting from Madathur this year goes to the Pollutant Board. Villagers have also announced that they will block the pollution control board. Traffic damage has taken place in Thoothukudi district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X