For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ளம்புதூர் சிறுவன் படுகொலை: குற்றவாளியை கைது செய்ய கோரி உறவினர்கள் தொடர் உண்ணாவிரதம்

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புதூரில் சிறுவனை படுகொலை செய்தவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் 2-ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வெள்ளம்புதூரில் நிலத்தகராறு காரணமாக சிறுவனை கொலை செய்தவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் 2-ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி(45). இவரது கணவர் இறந்துவிட்டார். இவருடன் 8 வயது மகன் சமையனும், 14 வயதில் சிறுமியும் வசித்து வந்தனர்.

இவரின் மற்ற 4 பிள்ளைகள் பெங்களூரு மற்றும திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர். சிறுமி டி தேவனூரில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சமையன் வேலம்புதூரில் உள்ள அரசுப் பள்ளியில் 4ம் வகுப்பு பயின்று வந்தார்.

சரமாரி தாக்குதல்

சரமாரி தாக்குதல்

இந்நிலையில் கடந்த வாரம் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சில கும்பல் இவர்களது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த ஆராயி, அவரது மகன், மகளை கடுமையாக தாக்கியது. இதில் சிறுவன் உயிரிழந்துவிட்டான்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

மேலும் தாயையும், மகளையும் கடுமையாக தாக்கிய கும்பல கூட்டு பலாத்காரம் செய்ததில் அவர்கள் சுயநினைவை இழந்தனர். இவர்கள் பொழுது விடிந்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்து அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

14 சென்ட் நிலத்துக்காக சிறுவனை கொன்று , பெண்ணையும், சிறுமியையும் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த ஒரு வாரம் ஆகியும் இதுவரை போலீஸார் யாரையும் கைது செய்யவில்லை.

உறவினர்கள் போராட்டம்

உறவினர்கள் போராட்டம்

சிறுவனை படுகொலை செய்து ஆராயியையும், மகளையும் பலாத்காரம் செய்த கும்பலை கைது செய்ய வேண்டும் என்று கோரி உறவினர்கள் இன்று 2-ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

English summary
A 8 years old boy who assaulted to Death for land issue in Villupuram. The boy's relatives indulge in hunger strike for 2nd day, to arrest the person who kills the boy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X