விழுப்புரத்தில் டெம்போ டிராவலர் கவிழ்ந்து விபத்து... 2 பேர் பலி: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் அவனம்பட்டியில் டெம்போ வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 10 பேர் பலத்த காயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் சென்னை நெடுஞ்சாலையில் அவனம்பட்டி என்ற ஊரின் அருகே 20 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு டெம்போ டிராவலர் வந்தது. அப்போது திடீரென நிலைதடுமாறி வண்டி உருண்டது.

இந்த எதிர்பாராத விபத்தால் வண்டியில் பயனம் செய்த இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், பத்துப் பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்களும் போலீசாரும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Viluppuram Avanampatti tempo traveler met with an accident and 2 women died there itself. And 10 more injured heavily.
Please Wait while comments are loading...