For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்: 28ல் தேரோட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காரைக்குடி: காரைக்குடியை அடுத்த பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

Vinayagar Chathurthi festival flag hoisting in Pillaiyarpatti

கற்பக விநாயகர் ஆலயத்தில் 10 நாள் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியளவில் மூஷிக படம் உள்ள கொடி, திருக்கோயில் வலம் வந்து,கொடிமரத்திற்கு எழுந்தருளல் நடைபெற்றது.பின்னர் கொடி,கொடிமரத்திற்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அங்குசத்தேவருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

இதையடுத்து 10 நாட்களும் சிறப்பு பூஜைகளும், இரவில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறும். இரண்டாம் நாள் முதல், எட்டாம் திருநாள் வரை,காலையில் வெள்ளிக்கேடகத்தில், சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஆகஸ்ட் 25ம் தேதி கஜமுகாசுர சம்ஹாரம் நடைபெறும். 28ம் தேதி தேரோட்டமும், 29ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா அன்று தீர்த்தவாரியும் நடைபெறும்.

English summary
10 day Vinayagar chaturthi festival has started at Pillaiyarpatti Karpaga Vinyakagar temple on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X