For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உச்சிப்பிள்ளையார், கற்பக விநாயகர் கோயில்கள் உட்பட தமிழகம் முழுக்க விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

Google Oneindia Tamil News

திருச்சி: தமிழகம் உட்பட நாடு முழுக்க விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருச்சி மலைக்கோட்டை விநாயகர் திருக்கோயில் பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. 274 அடி உயர மலைக்கோட்டை உச்சியில் வீற்றிருக்கிறார் உச்சிப்பிள்ளையார். உச்சிப்பிள்ளையார் கோயிலில், 150 கிலோ எடையுள்ள பிரமாண்ட கொழுக்கட்டை படையல் இன்று செய்யப்படுகிறது. முதலில் உச்சிப்பிள்ளையாருக்கு 75 கிலோ எடையுள்ள கொழுக்கட்டையும், பிறகு, மாணிக்க விநாயகருக்கு, 75 கிலோ எடையுள்ள கொழுக்கட்டையும் தனித்தனியாக படைத்து வணங்கப்படும்.

Vinayagar Chaturthi celebrations in Tamilnadu

பிள்ளையார் பட்டியிலுள்ள கற்பக விநாயகர் திருக்கோயிலில், காலை முதலே பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் நன்மை தரும் 108 விநாயகர்களுக்கு கீரிடம் அணிவிக்கப்பட்டது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு அலங்காரங்களுடன் பூஜை நடைபெற்றது.

மும்பை சித்தி விநாயகர் கோயில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயில்களில் காலை முதலே, வழிபாடு செய்தனர்.

Vinayagar Chaturthi celebrations in Tamilnadu

புதுச்சேரி ஈஸ்வரி கோபால் வீட்டு விநாயகர்

திருவனந்தபுரம் விநாயகர் கோயில், தேங்காய் உடைக்கும் வழிபாடு பிரசித்தி பெற்றது. தினசரி 20,000 தேங்காய் அளவுக்கு உடைக்கப்படும் விநாயகர் கோயிலில், இன்று 50,000 தேங்காய் வரை உடைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகருக்கு பழங்கள் படைத்து வழிபாடு செய்தனர்.

English summary
Vinayagar Chaturthi celebrate across the country including Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X