For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதெல்லாம் நியாயமா விஷால் .. திருட்டு விசிடிக்கு எதிராக போராடிய நீங்களே பெயரைத் திருடலாமா!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    விஜய் மக்கள் இயக்கப் பெயரை சுட்டு புது இயக்கம் கண்ட விஷால் | Vishal copies Vijay logo

    சென்னை: திருட்டு விசிடிக்கு எதிராக போராடிவிட்டு விஜய் இயக்கத்தின் பெயரை திருடலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    நடிகர் விஷால் என்றால் திடீரென கடைகளுக்குள் புகுந்து திருட்டு விசிடியை பறிமுதல் செய்வதே ஆகும். இவர் நடித்த படங்களை காட்டிலும் இந்த செயலால் அதிகம் பிரபலம் ஆனார்.

    அறிவுரை

    அறிவுரை

    அவர் பல்வேறு ஊர்களில் உள்ள சிடி கடைகளில் அத்துமீறி நுழைந்து அங்கு திருட்டி விசிடியை பார்த்துவிட்டால் போதும் உடனே பொங்கிவிடுவார். மேலும் நான் உன் வீட்டுக்குள் வந்து திருடினால் நீ சும்மா இருப்பியா என்று கேட்டு கேசட் கடைக்காரர்களுக்கு அறிவுரை சொல்வார்.

    விஷால் கொந்தளிப்பு

    விஷால் கொந்தளிப்பு

    திருட்டு விசிடியை ஒழிக்கவும் இவர் பாடுபட்டு வருவதாக கூறிக் கொள்கிறார். தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு சவாலும் விட்டார். எனினும் அவர்கள் இதற்கெல்லாம் அசராமல் அவரது படத்தையே திருட்டு விசிடியாக பிரிண்ட் போடுகின்றனர். இதனால் விஷால் மிகவும் கொந்தளித்தார்.

    விஜய்யிடம் இருந்து காப்பி

    விஜய்யிடம் இருந்து காப்பி

    இந்த நிலையில் இன்றைய தினம் அவர் அரசியல் இயக்கத்தை தொடங்கினார். அதற்கு மக்கள் நல இயக்கம் என பெயரிட்டுள்ளார். கட்சியின் பெயரும், லோகோவும் விஜயிடம் இருந்து காப்பியடித்தது அப்பட்டமாக தெரிகிறது.

    நியாயம்தானே

    நியாயம்தானே

    இதனால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள், திருட்டு விசிடிக்கு பொங்கிய விஷால் இப்படி எங்கள் இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் திருடுவது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சரிதானே! அவர்கள் கேட்பதும் நியாயம்தானே!

    English summary
    Despite Vishal gets angry over piracy, he himself steals Vijay's movement name and logo for his own movement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X