For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இணையதளத்தில் திருட்டுத்தனமாக 'மெர்சல்’ பார்த்த எச். ராஜாவுக்கு விஷால் கடும் கண்டனம்

இணையதளத்தில் மெர்சல் படம் பார்த்ததாக கூறிய எச். ராஜாவுக்கு விஷால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இணையதளத்தில் மெர்சல் படத்தை திருட்டுத்தனமாக படம் பார்த்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி, டிஜிட்டல் இந்தியா திட்டங்களை விமர்சித்த மெர்சல் படத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிவி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, இணையதளத்தில் மெர்சல் படத்தைப் பார்த்ததாக கூறியிருந்தார்.

Vishal Condemns H Raja over mersal issue

இது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விஷால் கூறியுள்ளதாவது:

இணையதளத்தில் திருட்டுத்தனமாக படத்தைப் பார்த்ததாக கட்சிப் பொறுப்பில் இருக்கும் எச். ராஜா பொதுவெளியில் கூறியிருப்பது வேதனை தருகிறது. மக்கள் அறிந்த அரசியல்வாதியாக இருந்து கொண்டு திருட்டி விசிடியை எச். ராஜா ஆதரிக்கிறாரா?

திருட்டு விசிடி குற்றத்தை அரசுகள் சட்டப்பூர்வமாக்கிவிட்டன. இணையதளத்தில் திருட்டுத்தனமாக படம் பார்த்த எச்.ராஜாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். எச். ராஜா தம்முடைய செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

English summary
General Secretary of Nadigar Sangam and the president of Tamil Film Producers’ Council Vishal has condemend BJP National Secretary H Raja over Mersal row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X