For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்கெட்ச் போட்டு ரவுடிகளை தூக்கிய போலீஸுக்கு நடிகர் விஷால் பாராட்டு

சென்னையில் ரவுடிகளை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்ததை அடுத்து அவர்களை நடிகர் விஷால் பாராட்டியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ரவுடிகளை தூக்கிய போலீஸுக்கு நடிகர் விஷால் பாராட்டு- வீடியோ

    சென்னை: தேடப்படும் ரவுடிகளான பினு உள்பட 70-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்த போலீஸாருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.

    கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரவுடி பினு மீது ஏராளமான கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. அவர் தனது கூட்டாளிகளுடன் பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கம் கிராமத்தில் பிறந்த நாள் கொண்டாட வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    Vishal praises Police officers for arresting rowdies in Chennai

    இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று ரவுடிகளை சுற்றி வளைத்தனர். துப்பாக்கி முனையில் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் போலீஸாரின் செயல்பாட்டை நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் , பயங்கர ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் இருந்த ரவுடிகளை சென்னை போலீஸார் சுற்றி வளைத்த நடவடிக்கை மிகவு்ம அற்புதமான ஒன்று. போலீஸாரின் இந்த நடவடிக்கை என்னை மிகவும் கவர்ந்தது.

    இதற்காக சென்னை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், துணை ஆணையர் சர்வேஷ் உள்ளிட்டோருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவில்தான் நாங்கள் இதுபோன்ற கைது நடவடிக்கைகளை பார்த்துள்ளோம். ஆனால் சினிமா பாணியில் உண்மையில் இதுபோல் ரவுடிகளை கைது செய்தது என்னை வியக்க வைத்துள்ளது. உண்மையான ஹீரோக்களுக்கு பாராட்டுகள் என்று விஷால் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Actor Vishal says in his tweet that Truly inspired by de fantastic raid operation by de Chennai Police 2 arrest 67 Rowdies who were caught red handed wit dangerous arms & ammunitions.I humbly congratulate the Commissioner of Police,Mr AK Viswanathan for his great leadership & DCP Mr Sarvesh for this tremendous job.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X