For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிருஷ்ணசாமியின் கனவை நிறைவேற்றுவது நம் கடமை.. ட்விட்டரில் நடிகர் விஷால் இரங்கல்

நீட் தேர்வு எழுதுவதற்காக மகனை கேரளா அழைத்துச்சென்று மாரடைப்பால் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் உயிரிழப்புக்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

By Rajendra Prasath
Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வால் அப்பாவை இழந்த கஸ்தூரி மகாலிங்கம்-வீடியோ

    சென்னை: நீட் தேர்வு எழுத தமது மகனை கேரளா அழைத்துச் சென்று மாரடைப்பால் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் கனவை நிறைவேற்ற கஸ்தூரி மகாலிங்கத்தை மருத்துவராக்குவது நம் கடமை என நடிகர் விஷால் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    நீட் தேர்வுகள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 மணிவரை நடைபெற்றது. தமிழக மாணவர்களுக்கு மட்டும் கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சிக்கிம் என 2,000 கிமீ தொலைவுக்கு அப்பால் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்வு மையங்களை மாணவர்கள் சென்றடைவதற்குள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாக்கினர்.

    Vishals condolence for neet exam victim Krishnasamy

    5,000க்கும் அதிகமான தமிழக மாணவர்கள் கேரளாவில் பல தேர்வு மையங்களில் எழுதினார்கள். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு தமது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை அழைத்துக் கொண்டு, திருத்துறைபூண்டியில் இருந்து சென்றார் கிருஷ்ணசாமி.

    இரவு முழுவதும் தூங்காமல் ரயிலில் நின்று கொண்டே சென்ற கிருஷ்ணசாமி, மகனை தேர்வு மையத்தில் விட்டுவிட்டு தங்கும் அறைக்குச் சென்றார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணசாமியின் மரணத்துக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

    அதில், " இன்று நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் எனது வாழ்த்துக்கள். கடும் மன உளைச்சலுக்கும், அலைக்கழிப்புக்கும் இடையிலும் கூட தங்கள் மருத்துவக் கனவுக்காக என் தம்பி, தங்கைகள் இந்தத் தேர்வை எழுதியிருக்கிறார்கள். நீட் தேர்வுக்காக கேரளா சென்று அங்கேயே தந்தை கிருஷ்ணசாமியை பறி கொடுத்த மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்கிறேன். இந்த இழுப்பு ஈடு செய்ய முடியாதது. அவரை ஒரு மருத்துவராக்கி கிருஷ்ணசாமியின் கனவை நிறைவேற்றுவதும் நம் கடமை. கஸ்தூரி மகாலிங்கத்துக்கு அதற்கான உதவிகளை செய்யத் தயார். அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள்" என்று விஷால் கூறியுள்ளார்.

    English summary
    Actor Vishal expresses his condolence for the sudden dimise of neet exam victim Krishnasamy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X