For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயங்கரவாத அச்சுறுத்தல்: சென்னை விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் நுழைய தடை !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்குள் பார்வையாளர்களுக்கு 8 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்திற்குள் இன்று அதிகாலை நுழைந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 தீவிரவாதிகள், பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை அதிகாரி ஒருவர் பலியாயினர்.

Visitors banned in Chennai Airport

இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. நீலகிரியில் உள்ள ராணுவம் முகாமில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ராணுவ முகாம்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழைய 8 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நலன் கருதி இன்று இரவு 7 மணி முதல் 9 -ம் தேதி நள்ளிரவு வரை பன்னாட்டு விமான நிலையத்திற்குள் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Visitors will not be allowed to enter the international arrival and departure area for eight days in chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X