For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வி.ஐ.டி.-ல் ரிவியரா 2014: ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்

By Siva
Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(விஜடி) பல்கலைக்கழகம் நடத்தும் வருடாந்திர சர்வதேச விளையாட்டு மற்றும் கலை விழாவான ரிவியரா 2014 வரும் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறுகிறது.

வேலூரில் உள்ள வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(விஜடி) பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டு மற்றும் கலை விழாவான ரிவியராவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா வரும் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது.

VIT University gears up for Riviera 2014

கடந்த ஆண்டு நடந்த விழாவில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் படிக்கும் 20 ஆயிரம் மாணவ, மாணவியர் தவிர பல்வேறு நாடுகளில் உள்ள 700 கல்லூரிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

வி.ஐ.டி.யில் ஒரே நேரத்தில் அதிகமானோர் கை மல்யுத்தத்தில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்தனர். மேலும் ஐஎஸ்ஓ 9001:2008 தரச் சான்றிதழ் பெற்ற இந்தியாவின் முதல் பல்கலைக்கழக விழா ரிவியரா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுக்கான விழா மறக்க முடியாத ஒன்றாக நிச்சயம் இருக்கும் என்று வி.ஐ.டி. உத்தரவாதம் அளித்துள்ளது. இசை பிரியர்களுக்காக இசை விருந்து மற்றும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

நாடக பிரியர்களுக்காக கனவு உலக திரைப்பட விழா மற்றும் கல்பலி-தெருக்கூத்து ஆகியவை நடத்தப்படுகிறது. நடன பிரியர்களுக்காக 4 போட்டிகள் நடத்தப்படுகிறது. இது தவிர புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

விளையாட்டு பிரிவில் நீச்சல், டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, கிரிக்கெட், ஸ்னூக்கர், ஸ்குவாஷ், பேட்மிண்டன் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் போன்று இந்த ஆண்டு பிரபலங்கள் கலந்து கொள்ளும் இசை இரவு நிகழ்ச்சியும் உண்டு. கடந்த ஆண்டுகளில் பாடகிகள் அனுராதா ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல், சுசித்ரா, பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், சோனு நிகாம், இசை அமைப்பாளர்களான ஷங்கர்-இஹ்சான்-லாய் உள்ளிட்ட ஏராளமானோர் இசை விருந்து படைத்துள்ளனர்.

இந்த ஆண்டுக்கான ரிவியரா விழாவின் ஆன்லைன் மீடியா பார்ட்னர் ஒன்இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
VIT University, Vellore-India, is set to conduct its Annual International Sports and Cultural Festival, Riviera'14 which is to be held from February 6th to 9th, 2014. Riviera'13 witnessed more than 6000 students from over 700 colleges from all over the world, in addition to the 20,000 plus strength of their own students on campus, for a sports and cultural extravaganza that is one of the finest in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X