For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செய்தியாளர்களை உள்ளே விடாமல் மழையிலேயே நிற்க வைத்து ஆதரவாளர்கள் சூழ பேட்டி கொடுத்த விவேக்!

வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய ஜெயாடிவி சிஇஓ விவேக் செய்தியாளர்களை மழையிலேயே நிற்க வைத்து பேட்டி கொடுத்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தியாளர்களை மழையிலேயே நிற்க வைத்து பேட்டி கொடுத்த விவேக்!- வீடியோ

    சென்னை: வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய ஜெயாடிவி சிஇஓ விவேக் செய்தியாளர்களை மழையிலேயே நிற்க வைத்து பேட்டி கொடுத்தார்.

    சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் குடும்பத்தினர் வீட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது.

    சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டிவியின் சிஇஓவுமான விவேக் ஜெயராமனை குறி வைத்தே இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. 27 வயதான விவேக் எப்படி பல்லாயிரம் கோடி சொத்துக்களுக்கு அதிபதியானார்? அவருக்கு எப்படி பணம் வந்தது என்ற ரீதியில் அவரை சென்டர் பாயின்ட்டாக வைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    விவேக்கிடம் விசாரணை

    விவேக்கிடம் விசாரணை

    இந்த சோதனை நேற்று நிறைவடைந்ததை அடுத்து விவேக் விசாரணைக்காக நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை வாங்கியது குறித்து கேள்வி எழுப்பிய வருமான வரித்துறை அதிகாரிகள் 10 மணிக்கு மேல் அவரை வீட்டிற்கு அனுப்பினர்

    விவேக் விளக்கம்.

    விவேக் விளக்கம்.

    இந்நிலையில் சென்னையில் விவேக் ஜெயராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டு குறித்தும் அதிகாரிகளின் விசாரணை குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

    மழையில் நிற்க வைத்து..

    மழையில் நிற்க வைத்து..

    கொட்டும் மழையில் கேட்டுக்கு வெளியே அவரது ஆதரவாளர்களுடன் உதவியாளர்கள் குடைபிடிக்க விவேக் செய்தியளார்களை சந்தித்தார். செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்காமல் மழையில் காம்பவுண்டுக்கு வெளியே நிற்க வைத்தப்படியே அவர் விளக்கம் கொடுத்தார்.

    நினைத்ததை கூறிச்சென்றார்

    நினைத்ததை கூறிச்சென்றார்

    செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த அவர், தான் என்ன கூற திட்டமிட்டு வந்தாரோ அதை மட்டும் கூறிச்சென்றார்.
    கணக்கு விவரங்களை வருமானவரித்துறையினரிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

    ஜெயா டிவி ராஜ உபசாரம்

    ஜெயா டிவி ராஜ உபசாரம்

    காம்பவுண்டுக்குள் செய்தியாளர்களை அனுமதித்தால் வீட்டை படம் பிடித்து விடுவார்கள் என்பதால் அவர் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. ரெய்டின் போது செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு ராஜ உபசாரம் அளித்தது ஜெயா டிவி நிர்வாகம்.

    செய்தியாளர்கள் அதிருப்தி

    செய்தியாளர்கள் அதிருப்தி

    இந்நிலையில் இன்று ரெய்டு குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை தெருவிலேயே நிறுத்தி விளக்கமளித்துள்ளார் விவேக். விவேக்கின் இந்த நடவடிக்கை செய்தியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Jaya TV CEO Vivek Jayaraman met press today. He did not allow press people inside of even his compound.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X