For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ளத்தால் தத்தளித்த கடலூர் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்திய தன்னார்வலர்கள்

By Siva
Google Oneindia Tamil News

கடலூர்: வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓணாங்குப்பத்தில் தன்னார்வலர்கள் சேர்ந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியுள்ளனர்.

வரலாறு காணாத கனமழையால் கடலூர் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் கோவில்கள், திருமண மண்டபங்களில் தஞ்சம் அடைந்தனர். பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் வடிந்த நிலையில் மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகிறார்கள்.

Volunteers conduct medical camp in a Cuddalore village

இந்நிலையில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுகா, வடலூர் மருத்துவ வட்டத்தில் உள்ள ஓணாங்குப்பம் கிராமத்தில் தன்னார்வலர்களால் கடந்த 13ம் தேதி இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாம் மூலம் 200க்கும் மேற்பட்ட மக்கள் இலவச மருத்துவ உதவி பெற்றனர். இந்த முகாமில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் முதுகலை சமூக மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் சரவணகுமாரி, சீனிவாசன், தியாகராஜன் மற்றும் அரவிந்த் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

Volunteers conduct medical camp in a Cuddalore village

இந்த முகாமிற்கு திரு வி. குமரேசன் மற்றும் நண்பர்கள் (பெங்களூர்) திரு பி. நாகராஜன் மதுரை, திரு ஜெயராஜ் மற்றும் நண்பர்கள் (பெங்களூர்), திரு டி மாணிக்கவாசகம் நன்கொடையாக வழங்கிய மருந்துகள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. சிஐடி 91ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் முகாம் நடத்த நிதி உதவி செய்தனர்.

தன்னார்வலர்கள் திருமதி தமிழரசி, திருமதி மீனா, திரு பத்மநாபன் இம்முகாமிற்கு உறுதுணையாக இருந்தனர். இந்த முகாமை நடத்த உதவிய டாக்டர் ரா ராஜேஷ் குமார், தமிழ்மாறன் சிஐடி 91 முன்னாள் மாணவர் ஒருங்கிணைத்தனர். முகாம் நடத்த அனுமதி வழங்கிய கடலூர் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், திரு டி கிருஷ்ணமூர்த்தி, வடலூர் வட்டம் டாக்டர் அகிலா செந்தில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.

English summary
Volunteers have conducted a free medical camp in Onanguppam Village in Cuddalore District on december 13th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X